ABC(APPLE BEETROOT CARROT JUICE )
இப்போல்லாம் அவசர யுகமா போச்சு .. தினமும் காலைல சரியா சாப்பிடாம ,எல்லோரும் வேலைக்கும், குழந்தைகள் ஸ்கூல்லுக்கும்
கிளம்பி போறாங்க ...
காலைல இந்த ஜூஸ் குடிச்சு உங்க வேலைய துவங்கி பாருங்க ...
நல்ல புத்துணர்ச்சியோட இருப்பிங்க...
தேவையான பொருட்கள் :
ஆப்பிள் -1
பீட்ரூட் -1 (சிறியது )
காரட் -1
சர்க்கரை -2 ஸ்பூன்
பால் -1 கப்
வெனிலா எசென்ஸ் -2 துளிகள் (உங்கள் விருப்பம் )
தண்ணீர் -1கப்
செய்முறை :
ஆப்பிள் ,காரட் ,பீட்ரூட் இவைகளை சுத்தம் செய்து தோல் சீவி ,துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும் ..
பாலை காய்ச்சி,ஆற விடவும்
மிக்ஸ்யில் ஆப்பிள் ,பீட்ரூட் ,காரட் இவைகளை தண்ணீர் சேர்த்த ுநன்கு அரைத்துக்கொள்ளவும் .
இவற்றை ஜூஸ் வடிகட்டியில் வடித்துக்கொள்ளவும்
பின்னர் இதனுடன் பால் ,சர்க்கரை சேர்த்து , 1 சுற்று மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்
அவ்வளவுதான் சுவையான healthy abc ஜூஸ் தயார்
எல்லா சத்துக்களும் இதில் கிடைப்பதால்,குழ்ந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஜூஸ் இது .
எங்க வீட்ல எல்லாருக்கும் இது favorite .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....