எல்லாருக்கும் ஈஸியா செய்யகூடிய fried rice இது ..நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும் ...
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி -1 கப் (சமைத்து வடித்தது )
பல்லாரி -1
காய்கறிகள் -நறுக்கியது (1 கப் )
பச்சை மிளகாய் -1
இங்கி பூண்டு விழுது -1`ஸ்பூன்
பட்டை -1
கிராம்பு -1
பிரிஞ்சி இலை -1
சோயாசாஸ் -1 ஸ்பூன்
அஜினமோட்டா -சிறிது
பட்டாணி -1/4வேகவைத்தது
உப்பு -தேவைக்கு
செய்முறை :
முதலில் அரிசியை சுத்தம் செய்து வேகவைத்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும்
விருப்பட்டால் நீங்கள் உபயோகிக்கும் அரிசியிலேயே செய்யலாம் ..
இஞ்சி ,பூண்டு ,பச்சைமிளகாய் மூன்றையும் சேர்த்து அரைத்து எடுக்கவும்
காய்கறிகள் முட்டைகோஸ் ,பீன்ஸ் ,காரட் ,காலிப்பிளவர் ,குடை மிளகாய் , சேர்த்துக்கொள்ளலாம்.இவைகளை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு ,பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை சேர்த்து பல்லாரி ,சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
அதனுடன் காய்கறிகள் சேர்த்து வதக்கவும் .எண்ணையிலேயே காய்கறிகள் வேகும் வரை வதக்கவும் .உப்பு சேர்க்கவும்
வேகவைத்த பட்டாணியும் சேர்க்கவும்
வேகவைத்த அரிசியை ஆற விட்டு ,வதங்கிய காய்கறிகளுடன் சாதம் ,மிளகுத்தூள் ,சோயாசாஸ் ,அஜினமோட்டா சேர்த்து கிளறி இறக்கவும்
சுவையான மணமான fried rice தயார் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....