பூரி மசாலா சிறியவர்கள் மட்டும் இல்லாம முதியவர்களுக்கும் பிடிக்கும் .அதிகம் மசாலா சேர்க்காமல் ,அதே சமயம் டேஸ்டாவும் செய்ய கூடிய ரெசிபி இது ...எப்படின்னு பார்க்கலாம் வாங்க
தேவையான பொருட்கள் :
உருளை கிழங்கு - 2 (வேகவைத்தது )
பட்டாணி - 1 கப் (வேகவைத்தது )
பல்லாரி -1
இஞ்சி -1 இன்ச் (மிக சிறிய துண்டுகளாக்கவும் )
காரட் - 1
பச்சை மிளகாய் -1 (உங்கள் காரத்துக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம் )
கருவேப்பில்லை -1 கொத்து
கடலைபருப்பு -1 ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கடலை மாவு -1/2 ஸ்பூன்
எண்ணெய் -வதக்க
செய்முறை :
- பட்டாணியும் ,உருளைக்கிழங்கும் சேர்த்து உப்பு போட்டு குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்
- கடாயில் எண்ணெய் விட்டு ,கடுகு சேர்க்கவும், கடுகு வெடித்ததும் ,கடலை பருப்பு ,இஞ்சி துண்டுகள் ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் .
- பின்னர் இதனுடன் பல்லாரி ,காரட் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- அதனுடன் மஞ்சள் தூள் சேர்க்கவும் .
- அதை தண்ணீர் சேர்த்து மூடி இவற்றை கொதிக்க விடவும் .
- பிறகு பல்லாரி வெந்ததும் ,வேகவைத்த பட்டாணி மற்றும்,வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதில் சேர்க்கவும் .
- இப்போது கடலைமாவை சிறிது தண்ணீர் சேர்த்து ,கரைத்துக்கொள்ளவும்
- இதை கொதிக்கும் குருமாவில் விடவும் .விட்டவுடன் கிளறவும் .
- கடலை மாவு கரைசல் சேர்ப்பதால் குருமா தண்ணீராக இல்லாமல் "திக்"காக இருக்கும் .
- அவ்வளவுதான் பூரி மசாலா தயார் .சூடான பூரியுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இஞ்சி ,பல்லாரி ,பச்சை மிளகாய் இவை கலப்பதால் மிகவும் மணமாக இருக்கும் .
- sending this to :
- http://nandooskitchen.blogspot.in/2013/12/healthy-veg-side-dishes.html?showComment=1387439522339#c5895210251156994837
- http://priyaeasyntastyrecipes.blogspot.in/p/health-diet-host-lineup.html
Nice combo with dosa and puri. You are not linking to Gayathri's page and my page. Check it. Otherwise it is invalid entry.
பதிலளிநீக்குthanks a lot sahasra. i linked it now.thanks for remind me
பதிலளிநீக்கு