செவ்வாய், 5 நவம்பர், 2013

ஈஸி மிளகு ரசம் (easy pepper rasam)

   உங்களுக்காக இன்னைக்கு  ஒரு    சுலபமான ரெசிபியோட 
வந்து இருக்கேன் .....
திடீர் ரசம் ஈஸியா செய்யலாம் ...உடம்புக்கும் நல்லது                                      



தேவையான பொருட்கள் :

புளி  -எலுமிச்சை அளவு
மிளகுதூள்-  1 ஸ்பூன்
மிளகாய் தூள்-1 /2 ஸ்பூன்
தண்ணீர்- 1 and ` 1 /2 கப்
பூண்டு- 5 பல்
உப்பு-தேவையான அளவு
சீரகம்- 1 / 4  ஸ்பூன்

செய்முறை:

  • தண்ணீரில் புளியை ஊற விடவும் .பிறகு புளியை அதில் கரைத்துக்கொள்ளவும்
  • அதில் மிளகாய் தூள் (தனி மிளகாய் தூள் ),சீரக தூள் ,உப்பு ,மிளகுதூள் ,நசுக்கிய பூண்டு இவைகளை சேர்க்கவும் .
  • சேர்த்தவற்றை கரைத்துக்கொள்ளவும் .உப்பு ,காரம் சரி பார்க்கவும் .
  • பிறகு இதை அடுப்பில் வைக்கவும் .இப்போது எல்லாம் சேர்ந்து கொதிக்கும் நிலைக்கு வரும் ,அதாவது மேலே திரண்டு வரும் .இப்போது அடுப்பை நிறுத்தி விடலாம் .
  • இந்த ரசம் கொதிக்க விட்டால், கசந்து விடும் .அதனால் கொதிக்கும் முன்பே இறக்கிவிடவும் .
  • உங்கள் சுவைக்கு ஏற்ப புளி ,உப்பு,காரம் அளவை கூட்டியோ குறைத்தோ செய்யலாம் .
  • செரிமானம் செய்யகூடிய தன்மை இந்த ரசத்திற்கு உண்டு .ஜுரம் வந்தவர்களுக்கும் இது நல்லது . 
  • இதை சாதத்தோடும் சாப்பிடலாம் .அப்படியேவும் குடிக்கலாம் .
  • சுவையான மிளகு ரசம் ரெடி 
  • sending this to :
  • http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183
    http://anuzhealthykitchen.blogspot.in/2012/07/south-indian-kitchen-series-event-1.html
     
  •  
http://gayathriscookspot.blogspot.in/2013/11/winner-of-wtml-october-and-announcement.html

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...