வியாழன், 7 நவம்பர், 2013

வாழைத்தண்டு பொரியல் (vazhai thandu poriyal)

வாழைத்தண்டு பொரியல் எனக்கு ரொம்ப பிடிக்கும் . எல்லாருக்கும் மிகவும் நல்லது .இந்த பொரியல் செய்து பாருங்க .
நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும் .

தேவையான பொருட்கள் 


வாழைத்தண்டு -1 கப்( பொடியாக நறுக்கியது )
பாசிபருப்பு - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் -1 /2 ஸ்பூன்
மல்லித்தூள் -1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு

தாளிக்க :
கடுகு -1 ஸ்பூன்
சின்ன வெங்காயம்-3 (பொடியாக நறுக்கியது )
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கருவேப்பில்லை -1 கொத்து

செய்முறை :

  • முதலில் வாழைத்தண்டை சுத்தம் செய்து ,தோல் சீவி ,வட்ட வட்டமாக் நறுக்கவும் . நறுக்கும் போது நார் வரும் அதை எடுத்து விடவும் 
  • பின்னர் வட்டமான துண்டுகளை .பொடியாக நறுக்கி ,ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த தண்ணீர் எடுத்து அதில் போடவும் (இப்படி செய்வதால் வாழைத்தண்டு கருக்காது .(அ)தண்ணீரில் 1 ஸ்பூன் மோர் கலந்து அதில்  போடலாம் )
  • இப்போது கடாயை சூடு செய்து , எண்ணெய் விட்டு  அதில் கடுகு சேர்த்து வெடித்ததும் ,உளுந்தம்பருப்பு ,வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து ,வாழைத்தண்டை சேர்க்கவும் 
  • அதனுடன் பாசிபருப்பை கழுவி ,தண்ணீரை வடித்து அதையும் சேர்த்து , கிளறரவும் .
  • பிறகு அதனுடன் ,மஞ்சள் தூள் ,மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,உப்பு சேர்க்கவும் .
  • உப்பு சேர்க்கும்போது கவனமாக சேர்க்கவும் .குறைவாகவே சேர்த்து பிறகு தேவைப்பட்டால் சேர்க்கவும் .வாழைத்தண்டு உப்பு தாங்காது .
  • அதேபோல் தண்ணீர் சேர்க்கும்போதும் குறைவாகவே சேர்க்கலாம் (தெளிக்க கூட செய்யலாம் ).வாழைத்தண்டு தண்ணீர் விடும் .
  • இப்போது கடாயை மூடி வேகவிடவும் .நீர் சுண்டி வெந்ததும் இறக்கிவிடவும்.
  • சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார் .
  • வாழைத்தண்டு இரத்தம் சுத்தம் செய்யும் திறன் கொண்டது .சிறுநீரக கற்களையும் கரைக்கும் தன்மை கொண்டது .நார்ச்சத்து மிகுந்தது .உடல் பருமனை குறைக்கும் ஆற்றல் மிக்கது . 
sending this to :
http://anuzhealthykitchen.blogspot.in/2012/07/south-indian-kitchen-series-event-1.html
http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183
http://nandooskitchen.blogspot.fr/2013/12/healthy-veg-side-dishes.html
http://priyaeasyntastyrecipes.blogspot.in/p/health-diet-host-lineup.html



2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...