ஸ்வீட்னாலே லட்டு தான் நினைவுக்கு வரும் .பார்த்த உடனே சாப்பிட தோணும் .குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட வைக்கும் .
எங்கள் வீட்டில் இதை செய்து பாராட்டுக்கள் பல கிடைத்தது எனக்கு ..
இதோ லட்டு செய்முறை உங்களுக்காக ...
தேவையான பொருட்கள் :
கடலை மாவு -1மற்றும் 1/4 கப்
சர்க்கரை -1 மற்றும் 1/ 2 கப்
தண்ணீர் -1/2 கப் (பாகு தயாரிக்க )
கலர் பவுடர் -சிறிது
கிராம்பு -2 அ 3
எண்ணெய் - பொறிக்க
முந்திரி -10
ஏலக்காய் தூள் -சிறிது
நெய் -1 ஸ்பூன்
செய்முறை :
கடலை மாவை சலித்து வைக்கவும் .அதனுடன் கலர் பவுடர்,தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும் .
முந்திரியை நெய்யில் வறுத்து தனியாக வைக்கவும்
அடிகனமான பத்திரத்தில் சர்க்கரை பாகு காய்ச்சவும் .கம்பி பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும் .அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்
இப்போது எண்ணையை சுட வைத்து ,எண்ணைக்கு மேலே பூந்தி கரண்டி வைத்து (சிறிய ஓட்டிகள் உள்ள கரண்டி கூட போதுமானது )கரைத்த மாவை ஊற்றவும் .
பாதி வெந்தவுடன் பூந்திகளை எடுத்து உடனே பாகில் போடவும் .அதனுடன் கிராம்பு ,வறுத்த முந்திரி இவைகளை போடவும் .
இப்போது பூந்தி ,சர்க்கரை கரைசலில் நன்கு ஊறி இருக்கும் .அதனை கரண்டியின் அடி பக்கத்தால் நன்கு கிளறி விட்டு லேசாக சூடு இருக்கும் போதே லட்டு பிடித்து வைக்கவும்,
சுவையான லட்டு தயார் ..
sending this to:
and
Delicious Snowwhite, ennakku romba pidiccha ladoo, love it any time...
பதிலளிநீக்குthanks priya ... enakkum romba pidikkum ....
நீக்குYummy sweet. Thanks for linking.
பதிலளிநீக்கு