சனி, 26 அக்டோபர், 2013

mysore pak

மைசூர் பாக் இல்லாத விசேஷம் ஏது ? எல்லா  விசேஷங்களுக்கும் 
மைசூர்பாக் இருக்கும்  ..இந்த மைசூர்பாக் செய்த 2 நாளில் 
தீர்ந்து விட்டது எங்கள் வீட்டில் ...
 மைசூர்பாக் செய்முறை பார்க்கலாம் வாங்க ..

தேவையான பொருட்கள் :

கடலை மாவு -1 கப் 
சர்க்கரை -1 கப் 
நெய் -1 கப் 
தண்ணீர் -1/ 4கப் (பாகு தயாரிக்க )

செய்முறை :

கடாயில் 1 ஸ்பூன் நெய் விட்டு மாவை அதில் வறுக்கவும் ..மாவின் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும் ..

கடலை மாவை 3/4 பங்கு நெய் சேர்த்து ,கரைக்கவும்.கரைசல் நீர்க்க இருக்க வேண்டும் .
 மீதி  1/4 பங்கு மாவு அடுப்பில் கிளரும் போது சேர்க்க எடுத்து வைக்கவும் .

தட்டில் நெய் தடவி தனியே வைக்கவும் 

வறுத்த மாவை சலித்து தனியாக வைக்கவும் .

அதே சமயம் நான்ஸ்டிக் கடாயில்  சர்க்கரை பாகு தயாரிக்கவும் ..சர்க்கரையுடன்  1/4 கப் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும் ..கம்பி பதம் என்பது  நம் கட்டை விரலுக்கும் ,ஆள்காட்டி விரலுக்கும்  இடையே பாகை எடுத்தால் கம்பி போல கோடு வரும் .
அது தான் பதம் .

இப்போது காய்ச்சிய பாகில் கடலைமாவு கரைசலை அதில் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும் ,
அதில் மீதமுள்ள 1/4 பங்கு நெய்யும் சேர்த்து விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும் 

ஓரங்களில் பூர்த்து ,வரும் ,பின் திரண்டு வரும் ,அப்போது அடுப்பில் இருந்து இறக்கி ,நெய் தடவிய தட்டில் இடவும் .சூடாக இருக்கும் போதே கத்தியால் துண்டுகள் போடவும்

உங்கள் விருபதிற்கு ஏற்ப தட்டை பெரிதாகவோ,அல்லது சிறிதாகவோ வைத்துக்கொள்ளலாம் ...
சிறிதான தட்டில் இட்டால் மைசூர்பாகு  மொத்தம் சற்று கூடுதலாக இருக்கும். 

இப்போது சுவையான மணமான மைசூர்பாக் தயார் .
sending this to :




2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...