தேவையான பொருட்கள் :
முள்ளங்கி -1
கோதுமை மாவு - 1 கப்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் -சிறிதளவு
மல்லிதழை - சிறிது
செய்முறை :
முதலில் முள்ளங்கியை தோல் சீவி துருவிக்கொள்ளவும் ...
அதை 1௦ நிமிடம் அப்படியே விடவும்
பிறகு முள்ளங்கியை பிழிந்தால் அதில் இருந்து சாறு வரும் அதை எடுத்து வைக்கவும்
அதை தனியே எடுத்து வைக்கவும்...
இப்போது கோதுமை மாவுடன் உப்பு,எண்ணெய்,முள்ளங்கி சாறு,சிறிது தண்ணீர் கலந்து மாவை பிசையவும்.
இப்போது வாணலில் எண்ணெய் விட்டு பிழிந்த முள்ளங்கி ,கரம் மசாலா ,சீரக தூள் ,உப்பு ,மிளகாய் தூள்,மல்லிதழை சேர்த்து வதக்கவும்
பின்னர் சப்பாத்தி போல உருட்டி (கொஞ்சம் மொத்தமாக ) அதனுள் முள்ளங்கி மசாலாவை வைத்து மூடி அதை சப்பாத்திகளாக உருட்டவும்
உருட்டிய சப்பாத்திகளை தோசைக்கல்லில் சுட்டு எண்ணெய் தடவி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் ...
இப்போது முள்ளங்கி சப்பாத்தி தயார் ..
முள்ளங்கி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல கொடுக்கலாம்
பயன்கள் :
முள்ளங்கி சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் ..
உடலுக்கு குளிர்ச்சி தர கூடியது ..பசியை தூண்டும் ..
வயிறு சமந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் ...
thanks to :
http://www.arusuvai.com/tamil/node/25420
sending this to :
Super Sangeetha, asathiteenga, very very healthy and filling paratha. Thanks for linking it to the CWS event, waiting dear for more entries...
பதிலளிநீக்குthank you somuch dear ...eagerly waiting for adding more recipes
பதிலளிநீக்கு