சனி, 4 மே, 2013

ஈசி மட்டன் கிரேவி (easy mutton gravy)

                             ஈசி மட்டன் கிரேவி 


இந்த முறையில் மட்டன் கிரேவி செய்து பாருங்க .... சுலபமா இருக்கும் ...அதே சமயம் உங்க வீட்ல எல்லோரும் இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க ... எப்படி செய்றதுன்னு பாக்கலாம் வாங்க ...

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் -1 
தக்காளி -1 
மட்டன் -1 கப் 
பச்சை மிளகாய் - 2
மல்லி தழை -சிறிது 
கருவேப்பில்லை -சிறிது 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன் 
மல்லி தூள் -1 ஸ்பூன்
சீரக தூள் -1/2 ஸ்பூன் 
கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன்  
பட்டை -1 
கிராம்பு -1 
பிரிஞ்சி இலை -1
ஏலக்காய் -1


அரைக்க :

தேங்காய்-2 அ 3 துண்டுகள் 
சோம்பு -1 ஸ்பூன் 
பூண்டு -2 
பொட்டுகடலை -1/2 ஸ்பூன் 

செய்முறை :

முதலில் மட்டன் சுத்தம் செய்து அதை மஞ்சள் தூள்,உப்பு  அரைத்த இஞ்சி விழுது சேர்த்து  வேகவைத்து எடுத்து கொள்ளவும் (மட்டன் வேகவைத்த தண்ணீரில்  மட்டன் சூப் செய்யலாம் )
பின்னர் குக்கரை வைத்து அதில் எண்ணெய் விட்டு பட்டை ,கிராம்பு,ஏலக்காய் ,பிரிஞ்சி இலை போட்டு அதனுடன் வெங்காயம் ,கருவேப்பில்லை,பச்சை மிளகாய்  போட்டு வதக்கவும் ...

 வெங்காயம் வதங்கியதும் தக்காளி ,மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ,மல்லித்தூள் ,கரம் மசாலா தூள் ,சீ ரகத்தூள் சேர்த்து வதக்கவும் 

நன்கு வதங்கியதும் ,பின்னர் அதனுடன் வேகவைத்த மட்டன் துண்டுகள் சேர்க்கவும் 
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும் ...
இதனுடன் சோயா சாஸ் சிறிதும்  ,தேங்காய் அரைத்த விழுதையும் கலந்து கிளறி 5 நிமிடங்கள் மூடி சிம்மில் வைத்து விடவும் ...
 இதை இப்போது திறந்து கிளறி விடவும்.....

சுவையான ,மணமான மட்டன் கிரேவி தயார் ... இதை சாதம் ,சப்பாத்தி ,தோசை இவைகளுக்கு தொட்டு கொள்ளலாம் ...

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...