ஆசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 நவம்பர், 2014

மனைவியாய் நான் ....


நடுங்கும் குளிரில் நடுநிசி இரவில் ,
உன் உதறல் கண்டு ,
போர்வை போர்த்த பிடிக்கும் ...

பசியாய் வரும் உனக்கு பதார்த்தங்கள் பல
ருசியாய்ச் செய்யப் பிடிக்கும் ....

நீ கோபம் கொள்ளும் நேரம் ,
உன் கன்னம் கிள்ளப் பிடிக்கும் ....

குழந்தைகளை கொஞ்சும் உன்னைத்
தூரம் நின்று ரசிக்கப் பிடிக்கும் ....

மரங்கள் அடர்ந்த வீதியிலே
உன் கரங்கள் கோர்க்க பிடிக்கும் .....

மயிலிறகால்  வருடி உன்னைத்
 துயில் எழுப்பப் பிடிக்கும் ....

உன் வாசம் சுமந்த ஆடைகளை
துவைக்கும் முன் ரசிக்கப் பிடிக்கும் ....

துன்பங்கள் உன்னை துரத்தும் வேளை
தோள் சாய்த்து ,துணையாய்  இருக்கப் பிடிக்கும் ...

உன்னோடு வாழ்ந்த தருணங்கள் அதை
நினைத்துப் பார்க்க பிடிக்கும்...

மொத்தத்தில் ,
என் அன்பை வார்த்தைகளை விட ,
 இது போல கவிதைகளாய்
வெளிபடுத்த மிகப்  பிடிக்கும் ....



சனி, 23 ஆகஸ்ட், 2014

அன்பே ... அன்பே...



மெல்லச் சொட்டும் 
மழைத்துளியை 
கையில் ஏந்தி ,
பொத்திக் கொள்வேன் ....
அதை 
என் முத்தம் தேடும் ,
உன் தேகக்கீற்றில் 
உரசச் செய்வேன் .....

மிதந்து செல்லும் 
மேகம் திரட்டி ,
மேனியெங்கும் 
உருட்டி விடுவேன் .....

என் வெட்கமெல்லாம் 
மூட்டைகட்டி 
ஆற்றில் விடுவேன் ....
அதை 
அப்பப்போ அள்ளிப்பருகி ,
கன்னம் சிவப்பேன் ....

உன் பெயரைச்சுமந்த 
கவிதைகளை 
காற்றில் ,
பறக்கச் செய்வேன் ....
அதை 
சுவாசித்து சுவாசித்தே 
மூச்சடைத்துப்போவேன் ...

அன்பே ,
உனக்கே உனக்காய் 
சேர்த்து வைத்த 
ஆசையெல்லாம் ,
கருகிப் போனதே ....
என் 
காதல் கீதம் 
ஏனோ இன்று 
சோக கீதம் ஆனதே ...
கலைந்து போனதே ....
கனவாய் ஆனதே....
அன்பே ...
மீண்டும் வா ....
என்னை மீட்க வா ....

வியாழன், 13 மார்ச், 2014

ஏமாற்றம் ...

உனது அணைப்பிற்க்காக
ஏங்கும் எனக்கு ,
அதை
வெளியிட வார்த்தைகள்
கிடைப்பதில்லை....

என் 
கண்களை விட்டு 
கெஞ்ச சொல்லி
காத்துக்கிடக்கையில் ,
பெரும்பாலும்
ஏமாற்றமே மிஞ்சும் ....
என்றும் போல அன்றும் 
ஏமாற்றத்துடன்
நானும் எனது கண்களும் ......

வெள்ளி, 17 ஜனவரி, 2014

எங்களின் (பெண்களின் ) நட்பு

அன்றொருநாள்
அவளைக்
கண்டேன் ...

பள்ளிகூட
தோழியவள்...
பாசமிகு
பாவையவள் ...

கண்ட நொடி
கண்களில்
மிளிர்ந்தன
மின்னல்கள் ....

சிலநொடி
சிரிப்புகள் ...
பலநொடி
ஏக்கங்கள் ...

கலைந்து விட்ட
கனவுகள் ..

கிழிந்து விட்ட
கடிதங்கள் ...

மறந்து விட்ட
நினைவுகள் ...

மீண்டும்
முளைத்தன ...
முன்னே வந்து
சிரித்தன ...

அடடா ...
அதெல்லாம்
சில நொடி !
அழைப்புமணி
ஒலித்து
அலைபேசி அழைக்க ...

அச்சச்சோ !
நேரமாச்சு...
பதைத்தன கொஞ்சம்  ..
துடித்தது நெஞ்சம் ...

கடைசியில் கடக்கையில் ,
திரும்பினோம்
இருவரும் ...
கண்ணீரில் கனத்த
கண்களுடன் ...

பெண்களின் நட்பில்
பரிதாபம்தான்
என்றும்
மிச்சம் ...


ஞாயிறு, 24 நவம்பர், 2013

கண்ணாளனே ...


சித்திரையில் 
சுட்டெரித்த 
வெயிலாய் 
என் 
நித்திரையை 
களவாடும் 
காதலனும் 
நீதானே ....

கனவாய் வந்து 
கரம் கோர்ப்பவனும் 
நீதானே ....

என் நினைவலைகளை 
தினம் வருடும் 
நிலவொளியும் 
நீதானே ...

மணம் முடித்து 
கரம் சேர்த்தவனும்,
நீதானே ....
நீதானே ....

சத்தியமாய் 
நீதானே .....
என் சங்கீதமும் 
நீதானே .... 



திங்கள், 4 மார்ச், 2013

மழை மேகம்



              மழை மேகம்

நீர்த்துளிகளை 
சுமக்கும் 
மழை மேகம் போல, 

நான் 
உன்னைச் 
சுமக்கிறேன் ....
உன் அன்பு மழை 
பொழியும் வரை ......

thanks to :http://www.arusuvai.com/tamil/node/25214

உனக்காக ...

என் வீட்டுத் 
தோட்டமெல்லாம் 
ரோஜாக்கள் .....
நீ 
விரும்பி 
சூடுவதால் ....

என் வீட்டுச் 
சுவரெல்லாம் 
ஓவியங்கள் ...
நீ 
ரசிப்பாய் 
என்பதால்...

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

எனக்கும் ஓர் ஆசை .....


எனக்கும் ஓர் ஆசை .....
ஓர்  மழை  இரவில்  நம் 
முகம் நனைய .......
அக்கடும்  குளிரில் 
நம் மனம் கரைய .......

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...