பேப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேப்பர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 செப்டம்பர், 2016

birthday card made by my daughter

என் கணவரின் பிறந்த நாளுக்காக என் 9வயது மகள் செய்தது ...
அந்த பிஞ்சு கரங்கள் ஒவ்வொன்றாக தேடி தேடி செய்ததை பார்ப்பதே அழகா இருந்தது ..இதை பரிசளித்த போது அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார் 



திங்கள், 11 மே, 2015

recycled craft work from waste cd and paper

 இந்த பூக்கள் பேப்பர்,உபயோகிக்காத cd ,பேப்பர் கப் இவற்றை கொண்டு செய்தது .

சனி, 4 அக்டோபர், 2014

பென்சில் ஓவியம் 8 /pencil art /drawing 8

கிட்ட தட்ட இரண்டரை  ஆண்டுகளுக்கு முன்னர் வரைந்த ஓவியம் இது .போட்டோவை பார்த்து வரைய எடுத்த முதல் முயற்சி இது .  

வியாழன், 4 செப்டம்பர், 2014

எனது மகள் செய்த ஆசிரியர் தின வாழ்த்து அட்டை /teacher's day special greeting card made by sona)

எனது மகள்  நாளைக்கு அவள் ஆசிரியைக்கு கொடுக்க செய்த வாழ்த்து அட்டை  இது . இது எல்லாமே பேப்பர் கொண்டே செய்தது .

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

தங்கை பிறந்தநாளுக்காக செய்தது ....

என் தங்கையின் பிறந்தநாளுக்காக செய்தது . இது  பேப்பர் கொண்டு செய்தது .அதை அப்படியே ப்ரேம் செய்து அவளுக்கு கொடுத்துவிட்டேன் .

செவ்வாய், 4 மார்ச், 2014

வாழ்த்து அட்டை (greeting card )

இது ஒரு திருமண அழைப்பிதழில் செய்தது .. சில துண்டு பேப்பர்களும் , ஸ்டோன்ஸ் ,சாட்டின் ரிப்பனும் கொண்டு செய்ததது ....

புதன், 12 பிப்ரவரி, 2014

காதலர் தின வாழ்த்து அட்டை (valentine's day special greeting card)

எனது அண்ணனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது . காதலர் தினத்திக்காக எனது அண்ணி கிரீட்டிங் கார்ட் செய்து தர சொன்னாங்க .. முதல் முறையா அவங்க என்கிட்ட ஆசையா கேட்டதால ,வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே அவசர அவசரமாக செய்துள்ளேன் .. 


வியாழன், 23 ஜனவரி, 2014

நானும் ,எனது பேனாக்களும் ....

முன்பெல்லாம், பேனாக்கள் என்
கையில் கிடைக்கும்போது
அது அங்கங்கு என் பெயரை எழுதி
தன் அடையாளத்தை
விட்டுச் செல்லும் .....

இப்போதெல்லாம், பேனாக்கள்
மளிகை சாமான்களும்,
அப்பப்போ சில கவிதைகளும்,
எழுதி தன் பரிணாமத்தை
விளக்கிச் செல்கின்றன ...

ஆம்...
பேனாவைப்போல்
என் பெயரும், அந்த
பழைய புத்தகங்களில் ,
சப்தமில்லாமல்
சிதறிக் கிடக்கின்றன ....


ஞாயிறு, 8 டிசம்பர், 2013

sponge flowers on paper plate



தோழியின் வேண்டுகோளுக்கு இணங்க இதன் செய்முறையை படத்தில் விளக்கியுள்ளேன் ..  தாமதமாக பதிவிட்டமைக்கு மன்னிக்கவும் தோழி ..

படத்தில் செய்தது போல ரோஜாக்களை தயார் செய்து குண்டூசி குத்தி , வண்ணம் இட்டு , தனியே வைக்கவும் .
பிறகு  பேப்பரில் இலை வடிவம் வெட்டிக்கொள்ளவும் .அதற்கு பச்சை நிறம் அடித்து , ஊசி நூல் கொண்டு எல்லா வற்றையும் தைத்து பேப்பர் ப்ளேட்டில் வைத்து தைத்துக்கொள்ளவும் .அவ்வளவுதான் ...

புதன், 23 அக்டோபர், 2013

எனது மகள் செய்த கார்டு (greeting card )

என் மகள் coca cola பாட்டில் அடி பகுதியை பெயிண்ட் ல் நனைத்து செய்த greeting இது ... அவளோட அப்பா பிறந்த நாளுக்கு செய்து அவரை சந்தோஷ பட செய்தாள் ...இதோ உங்களின் பார்வைக்காக ...

புதன், 6 பிப்ரவரி, 2013

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...