இந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......
லேபிள்கள்
- கோலங்கள் (409)
- கவிதைகள் (107)
- சமையல் (106)
- மெஹந்தி (62)
- side dish (38)
- கைவினைகள் (38)
- my clicks (24)
- ஓவியங்கள் (22)
- ஸ்நாக்ஸ் (15)
- wall painting (13)
- டிபன் (13)
- பொம்மை வேலைப்பாடு (7)
- சிந்தனை துளிகள் (4)
- வீடியோக்கள் (4)
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 5 நவம்பர், 2016
வெள்ளி, 31 அக்டோபர், 2014
மணப்பெண்ணின் சொல்ல இயலா சோகங்கள் ...
அறையில் சிதறிய புத்தகங்களும் ,
அம்மாவின் அர்ச்சனைகளும் ,
அதுவரை செல்லாத சமையலறையும் ,
அம்மாவின் கைப்பக்குவமும் ,
வீதிமுனைப் பிள்ளையாரின்
பிரார்த்தனை பெட்டிஷன்களும்,
பரிசாய்ப் பெற்ற பதக்கங்களும் ,
பால்கனிப் பூக்களும் ,
செல்ல நாயின் சிணுங்கள்களும் ,
சிறுவயது கிறுக்கல்கள் சுமந்த சுவர்களும் ,
எல்லாம் சேர்ந்து ,
இதயம் பிளந்து ,
கண்ணீர் உதிர்த்து ,
பாரம் சுமந்து ,
புன்னகை போர்த்தி
புகுந்த வீடு
நுழைகிறாள்
புதுப்பெண்ணாக ...
வியாழன், 30 ஜனவரி, 2014
எனது மகளின் முதல் கவிதை எனக்காக ...
2 ஆவது படிக்கும் எனது மகள் சோனா,சில காரணங்களுக்காக என் அம்மா வீட்டில் தங்கிய போது ,அவள் எனக்காக எழுதிய கவிதை ...நிறைய தவறுகள் செய்து அவள் எழுதிய போதும் ,அவள் அன்பை கண்டு சிலிர்த்தேன் .. இதோ உங்களுக்காக அந்த கவிதை கீழே ..
நீ என் அம்மா
என் அம்மா நீ என் செல்ல அம்மா
நீ என்னை வளர்த்த நல்ல அம்மா
ஒவ்வொரு நாளும் அன்பு காட்டிய வெல்ல அம்மா ...
என்னை நாளும் வளர்த்த அன்பு அம்மா
நீ சிரிக்கும் போதெல்லாம் எனக்கு பார்த்துக்கொண்டே இருக்கணும்போல இருக்கிறது ...
அம்மா என்றால் தாய் ..என் அம்மா நீ..
ஒவ்வொரு நாளும் உன்னை பார்க்காமல் இருக்க முடியாது ...
நான் உன்னிடம் போன் அல்லது லேண்ட் லைனில் பேசிக்கொண்டே இருக்கிறேன் ..
இப்படிக்கு
s.சோனா
புதன், 22 ஜனவரி, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

