இந்த recipe கீதா ஆச்சல் அவங்க குறிப்பை பார்த்து சிறு சிறு மாற்றங்களுடன் செய்தது .... மிகவும் சுலபமானது ...சுவையும் நல்லா இருந்தது ...
http://sahasravantalu.blogspot.in/2013/11/walk-through-memory-lane-wtml-event.html
http://gayathriscookspot.blogspot.in/2013/11/winner-of-wtml-october-and-announcement.html
தேவையான பொருட்கள் :
ரவா - 1 கப் +1/4 கப்
சர்க்கரை - 3/4 கப் +1/4 கப் (சிரப் செய்ய)
வெண்ணை - 3/4 கப்
தேங்காய் துருவல் -1/2 கப் (அவங்க unsweetened coconut உபயோகிச்சாங்க )
தயிர் -1/2 கப்
செய்முறை :
- room temperature வெண்ணையை உருக்கிக்கொள்ளவும் .
- அதில் ரவையை சேர்த்துகொள்ளவும்
- அதனுடன் ,சர்க்கரை ,தயிர் ,தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அவனை 180c க்கு முற்சூடு செய்யவும் .
- ட்ரேவில் வெண்ணையை தடவி ,அதில் இந்த கலவையை கொட்டி , கரண்டியால் மேற்பக்கம் சமப்படுத்தவும்.
- பின் ட்ரே வை தட்டிக்கொள்ளவும் .இதனால் உள்ளே இருக்கும் காற்று போய்விடும் .
- பிறகு அதை விரும்பிய வடிவில் கட் செய்து ,அவனில் 200c க்கு 20- 30 நிமிடங்கள் வைத்து bake செய்யவும் .
- அதேசமயம் கால் கப் சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து ,சர்க்கரை கரையும் வரை ,அடுப்பில் வைக்கவும்
- பிறகு ட்ரே வை எடுத்து அதில் சர்க்கரை கரைசலை விட்டு மேலும் 10 -15 நிமிடங்கள் அவனில் வைத்து bake செய்யவும் .
- ட்ரே வை எடுத்து ஆறவிட்டு பரிமாறவும் ..
- சுவையான basbousa தயார் .
sending this to :
http://priyas-virundhu.blogspot.co.uk/2013/10/cws-event-cooking-with-seeds-wheat.htmlhttp://sahasravantalu.blogspot.in/2013/11/walk-through-memory-lane-wtml-event.html
http://gayathriscookspot.blogspot.in/2013/11/winner-of-wtml-october-and-announcement.html
Very delicious cake Sangeetha, I love this cake, but I have never tried adding coconut before may be try adding it the next time. Thanks a lot dear for linking it to the CWS event waiting for more lovely events...
பதிலளிநீக்குthank u so much priya..
நீக்குsuperaga vanthirukku sangeetha.
பதிலளிநீக்கு