சின்ன வயசில் அம்மா சாமிக்காக செய்யும் போது சாப்பிடனும்னு
அடம் பிடிச்சு இருக்கேன்...
கல்யாணமாகி முதல் முதலா மாவிளக்கு செய்தப்போ பயமா இருந்தது ..
(நல்லாவே வந்து இருந்தது )
இப்போ என் மகள் நான் செய்யும் போதே வேண்டும்னு
கேட்கிறாள்....(எல்லாருமே இப்படித்தான் போல )
இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாமா ?
தேவையான பொருட்கள் :
பச்சரிசி -1 கப்
வெல்லம் -முக்கால் கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன் +1 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் பச்சரிசியை 1 மணி நேரம் ஊற விடவும் .
- ஊற விட்ட அரிசியை வடிகட்டி ஒரு துணியில் கொட்டி பரப்பி நிழலில் (வீட்டிலேயே) உலர்த்தவும் .
- அதில் தண்ணீர் இல்லாத அளவு 30 - 40 நிமிடங்கள் உலர்த்தவும் .
- மிக்ஸியில் ,பச்சரிசியை அப்படியே நைசாக அரைக்கவும்.
- அரைத்தவற்றை ஒரு சல்லடையால் சலிக்கவும் .
- சலித்த மாவுடன் ,துருவிய வெல்லம் ,ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸியில் ஓட்டவும்.
- அதை ஒரு பாத்திரத்தில் அப்படியே பத்து நிமிடங்கள் விடவும் .இப்போது வெல்லம் இளகி வரும் .அப்போது உருண்டை பிடிப்பது சுலபமாக இருக்கும் .
- இப்போது மாவை உருட்டி உருண்டையாக பிடிக்கவும் .
- இதனுடன் உடைத்த தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும் ..
- sending this to : http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183
- http://anuzhealthykitchen.blogspot.in/2012/07/south-indian-kitchen-series-event-1.html
- http://sweettoothraf.blogspot.ae/2013/12/cooking-with-seeds-cws-december-2013.html
- http://priyaeasyntastyrecipes.blogspot.co.uk/p/cws-host-lineup.html
super maavilakku, lovely sangee...
பதிலளிநீக்குthank you somuch dear
பதிலளிநீக்கு