புதன், 20 நவம்பர், 2013

கோதுமை பணியாரம் (wheat paniyram)


பணியாரம் தமிழ் நாட்டின் பாரம்பரிய உணவு .பண்டிகை காலங்களில் மட்டுமில்லாமல் கொண்டாட்டங்களிலும் நம் முன்னோர்கள் விரும்பி உண்ட உணவு இது ...


தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 மற்றும் 1/2 கப் 
உளுந்து -கால் கப் 
உப்பு -1 pinch 
வெல்லப்பாகு -4 குழிக்கரண்டி 
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன் 
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன் 

செய்முறை :

  • முதலில் உளுந்தபருப்பை 1 மணி நேரம் ஊற விட்டு(அதிகம் நீர் விடாமல்)நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • அதனுடன் கோதுமைமாவு,உப்பு ,ஏலக்காய் தூள் ,தேங்காய் துருவல் ,வெல்லப்பாகு கலந்து ,போண்டா மாவு போல கரைத்துக்கொள்ளவும்.(உங்கள் விருப்பம் போல வெல்லப்பாகு அளவை கூட்டியோ ,குறைத்தோ கொள்ளலாம் .)
  • மாவு நீர்த்து விட்டால் சிறிது கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளலாம் .இனிப்பின் அளவு உங்கள் விருப்பம் தான் .
  •  ஒரு வாணலில் எண்ணெய் காய விட்டு அதில் இந்த மாவை போண்டா போடுவது போல ,கிள்ளி போடவும் .
  • இரண்டு புறமும் வேக விட்டு எடுக்கவும் .அவ்வளவுதான் சுவையான ,மணமான ,சத்தான கோதுமை பணியாரம் தயார் .
  •  கோதுமை மாவிற்கு பதில்  ,கேழ்வரகு மாவிலும் பணியாரம் செய்யலாம்.
 .
இது கேழ்வரகு பணியாரம் .
sending this to :
http://anuzhealthykitchen.blogspot.in/2012/07/south-indian-kitchen-series-event-1.html
http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...