வியாழன், 21 நவம்பர், 2013

அலைபேசி ...



அடம்பிடித்து
வாங்கினேன்
அழகான
அலைபேசி
ஒன்றை ...


அழைப்பு மணி
தேர்வு செய்ய
அரை நாளை
தொலைத்து
விட்டேன் ....

அப்ளிகேசன்
டவுன்லோடு
செய்ய
அடுத்த நாளும்
கரைத்து விட்டேன் .....

தூக்கம் வரும்
வேளையிலும்
தூங்காமல்
மூழ்கிடுவேன்
செல்லுக்குள்ளே ....

அழைப்பேதும்
வந்திராது
ஆனாலும் அடிக்கடி
'ஆன் ' செய்து
பார்த்திடுவேன் ...

அடிக்கடி 'டச்'
செய்தே
கட்டை விரலை
தேய்த்து விட்டேன் ...
ஆனாலும்
லாபமில்லை
அடிமையானேன்
அலைபேசிக்கு ..

செலவு செய்த
நேரமெல்லாம்
நினைத்து பார்த்து
கவலை கொள்வேன் ..
ஆனாலும்
அடுத்த நொடி
அலைபேசி
தேடிடுவேன்...

அலைபேசி
இல்லையென்றால்
அச்சச்சோ
அந்நாளை
நினைக்க கூட
முடியலையே ...


3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...