திங்கள், 18 நவம்பர், 2013

மா விளக்கு (maavilakku )


சின்ன வயசில் அம்மா சாமிக்காக செய்யும் போது சாப்பிடனும்னு
அடம் பிடிச்சு இருக்கேன்...
கல்யாணமாகி முதல் முதலா மாவிளக்கு செய்தப்போ பயமா இருந்தது ..
(நல்லாவே வந்து இருந்தது )
இப்போ என் மகள் நான் செய்யும் போதே வேண்டும்னு 
கேட்கிறாள்....(எல்லாருமே இப்படித்தான் போல )
இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாமா ? 
  

தேவையான பொருட்கள் :

பச்சரிசி -1 கப் 
வெல்லம் -முக்கால் கப் 
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன் 
நெய் - 1 ஸ்பூன் +1 ஸ்பூன் 

செய்முறை :

  • முதலில் பச்சரிசியை 1 மணி நேரம் ஊற விடவும் .
  • ஊற விட்ட அரிசியை வடிகட்டி ஒரு துணியில் கொட்டி பரப்பி நிழலில் (வீட்டிலேயே) உலர்த்தவும் .
  • அதில் தண்ணீர் இல்லாத அளவு 30 - 40 நிமிடங்கள் உலர்த்தவும் .
  • மிக்ஸியில் ,பச்சரிசியை அப்படியே நைசாக அரைக்கவும்.
  • அரைத்தவற்றை  ஒரு சல்லடையால் சலிக்கவும் .
  • சலித்த மாவுடன் ,துருவிய வெல்லம் ,ஏலக்காய் தூள் சேர்த்து மிக்ஸியில் ஓட்டவும்.
  • அதை ஒரு பாத்திரத்தில் அப்படியே பத்து நிமிடங்கள் விடவும் .இப்போது வெல்லம் இளகி வரும் .அப்போது உருண்டை பிடிப்பது சுலபமாக இருக்கும் .
  •  இப்போது மாவை உருட்டி உருண்டையாக பிடிக்கவும் .
  • இதனுடன் உடைத்த தேங்காய் சேர்த்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும் ..
  • sending this to :
  • http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...