செவ்வாய், 14 அக்டோபர், 2014

இஞ்சி கஷாயம்/ inji kashayam/ ginger kashayam

இங்கே எனது குழந்தைகளுக்கு சளி பிடித்துள்ளது . இந்த வானிலை மாற்றம் எளிதாக சளி பிடிக்க வைத்து விடுகிறது . இந்த இஞ்சி கசாயம் இரவில் அருந்தி படுத்தால் ,நிம்மதியாக தூங்கலாம் . மூக்கடைப்பு ,இருமல்,தொண்டைப்புண் ,ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது .முயற்சி செய்து பாருங்கள் ...நிச்சயம் பலன் அளிக்கும் .


தேவையான  பொருட்கள் :

இஞ்சி - 1 துண்டு 
மிளகு -1 மற்றும் 1/2 ஸ்பூன் 
மல்லி -1 மற்றும் 1/2 ஸ்பூன் 
வெல்லம் -  2 ஸ்பூன் 
தண்ணீர் - 1 மற்றும் 1/2 கப் 

செய்முறை :

          இஞ்சியை தோல் சீவி வைக்கவும் .
  • இஞ்சி ,மிளகு ,மல்லி இவற்றை கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும் 
  • இவற்றுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு , வடிகட்டி பரிமாறவும் .
  • இதனுடன் பால் கலந்தும்  குடிக்கலாம் .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...