புதன், 13 பிப்ரவரி, 2013

காஷ்மீரி ஆலூ

                                     காஷ்மீரி  ஆலூ





தேவையான பொருட்கள் :

வேகவைத்து வெட்டிய உருளை - 1 கப் 

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்



தக்காளி  அரைத்த விழுது - 1/2 கப் 

சீரகம் - 1/2 ஸ்பூன் 


மிளகாய் பொடி - 1 ஸ்பூன் 

மல்லி பொடி - 1/2 ஸ்பூன் 

சீரக பொடி -1/2 ஸ்பூன் 
சோம்பு பொடி -1/2 ஸ்பூன் 

கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன் 

மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன் 

மல்லி தூள் -1/2 ஸ்பூன் 

கரம் மசாலா பொடி - 1/2 ஸ்பூன் 

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 

உப்பு - தேவைக்கு ஏற்ப 

கருவேபிள்ளை -  சிறிது 

மல்லி தழை - சிறிது 

எண்ணெய் -  தேவையான அளவு 

செய்முறை


முதலில் வேகவைத்த  உருளைக்கிழங்கு துண்டுகளாக வெட்டுக... வெட்டிய  துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.....




பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு  சீரகம்  போட்டு , அதனுடன்  வெங்காயம் சேர்த்து வதக்கவும் ....



பின் கருவேப்பிள்ளை ,இஞ்சி பூண்டு விழுதையும்,மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,சீரக தூள்,சோம்பு தூள் ,கரம் மசாலா தூள் ,மல்லி தூள்   சேர்த்து வதக்கவும் .....



பிறகு தக்காளி விழுதையும் ,உப்பையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.....


எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் ,உருளைக்கிழங்கு துண்டுகளை அதில் போட்டு கிளறி விடவும் 

சிறிது தண்ணீர் தெளித்து கொதிக்க விடவும்....


உருளைக்கிழங்கு வேகும் வரை 2 நிமிடம்வேக விடவும் ....

பிறகு  மல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும் ....

இப்போது  சுவையான காஷ்மீரி ஆளு தயார்.... 


SENDING THIS TO :





2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...