திங்கள், 30 ஜனவரி, 2017

prawn 65/இறால் 65

இறால்65 மிகவும் அருமையா இருக்கும் .முக்கியமா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் 



தேவையான பொருட்கள் :

இறால் - 3/4 கிலோ 
இஞ்சி பூண்டு விழுது -1 1/2 ஸ்பூன் 
சிவப்பு மிளகாய் பொடி - 2 1/2 ஸ்பூன் 
கார்ன் மாவு -4-5 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன் 
மல்லித்தூள் - 1/2 டீ ஸ்பூன் 
கரம் மசாலாத்தூள் -1/2 டீ ஸ்பூன் 
உப்பு -தேவைக்கு 
எண்ணெய் - பொறிக்க 

செய்முறை :

  • இறாலை சுத்தம் செய்து தனியே வைக்கவும் 
  • ஒரு அடிகனமான பாத்திரத்தில் ,இறால் ,இஞ்சி பூண்டு விழுது ,கரம் மசாலாத்தூள் ,மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,உப்பு ,சிறிது தண்ணீர் (அதிகம் சேர்க்க வேண்டாம் )எல்லாம் சேர்த்து இறாலை வேகவிடவும் .தண்ணீர் சுண்டியதும் நிறுத்தவும் .
  • சூடு ஆறியதும் ,இதனுடன் கார்ன் மாவு சேர்த்து பிசைந்துகொள்ளவும் 
  • கடாயில் எண்ணெய் சூடானவுடன் இறாலை பொரித்து எடுக்கவும் .
  • சுவையான மொருமொரு இறால் 65 தயார்




2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...