புதன், 12 நவம்பர், 2014

மனைவியாய் நான் ....


நடுங்கும் குளிரில் நடுநிசி இரவில் ,
உன் உதறல் கண்டு ,
போர்வை போர்த்த பிடிக்கும் ...

பசியாய் வரும் உனக்கு பதார்த்தங்கள் பல
ருசியாய்ச் செய்யப் பிடிக்கும் ....

நீ கோபம் கொள்ளும் நேரம் ,
உன் கன்னம் கிள்ளப் பிடிக்கும் ....

குழந்தைகளை கொஞ்சும் உன்னைத்
தூரம் நின்று ரசிக்கப் பிடிக்கும் ....

மரங்கள் அடர்ந்த வீதியிலே
உன் கரங்கள் கோர்க்க பிடிக்கும் .....

மயிலிறகால்  வருடி உன்னைத்
 துயில் எழுப்பப் பிடிக்கும் ....

உன் வாசம் சுமந்த ஆடைகளை
துவைக்கும் முன் ரசிக்கப் பிடிக்கும் ....

துன்பங்கள் உன்னை துரத்தும் வேளை
தோள் சாய்த்து ,துணையாய்  இருக்கப் பிடிக்கும் ...

உன்னோடு வாழ்ந்த தருணங்கள் அதை
நினைத்துப் பார்க்க பிடிக்கும்...

மொத்தத்தில் ,
என் அன்பை வார்த்தைகளை விட ,
 இது போல கவிதைகளாய்
வெளிபடுத்த மிகப்  பிடிக்கும் ....



3 கருத்துகள்:

  1. கவிதை மிக அருமை !! உங்கள் வலைப்பூவுக்கு வரும் பொழுது அவள் விகடன் புத்தகம் படிப்பது போல் சந்தோஷம் தான் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  2. சாரதா அக்கா ... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ... நீங்கள் சந்தோசப்பட்டால் அது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பேறு ....மிக்க நன்றி அக்கா ..
    பிரியா அக்கா ..வாங்க வாங்க .. ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க ...நலமா ? உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...