தேவையான பொருட்கள் :
சிவப்பு குடைமிளகாய் -பாதி
பல்லாரி - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 1 பல்
தக்காளி - 1(சிறியது )
மல்லிதழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து -1/2 ஸ்பூன்
கருவேப்பில்லை - 1 கொத்து
செய்முறை :
- முதலில் பல்லாரி ,தக்காளி ,குடைமிளகாய் ,பூண்டு இவற்றை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும் .
- பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும் .
- வாணலில் எண்ணெய் விட்டு ,பல்லாரி ,பூண்டு ,பச்சை மிளகாய் ,குடை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும் .
- பிறகு இதனுடன் தக்காளி ,சேர்த்து வதக்கவும் .
- எல்லாம் வதங்கிய பின் மல்லித்தழை சேர்த்து சிறிது வதக்கி ,ஆற விட்டு அரைக்கவும் .
- இப்போது சுவையான குடைமிளகாய் சட்னி தயார் .
very delicious and perfectly made chutney, lovely color....
பதிலளிநீக்கு