வியாழன், 26 டிசம்பர், 2013

காலிபிளவர் கேப்சிகம் கிரேவி ( cauliflower capsicum gravy)



தேவையான பொருட்கள் :

காலிபிளவர் - 1 கப் (நறுக்கியது )
குடைமிளகாய் -1/2 கப் (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது)
பல்லாரி - 1 
தக்காளி - 1 
இஞ்சி - 1 துண்டு 
பூண்டு - 2 பல் 
சீரகம் -1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன் 
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன் 
கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன் 
பட்டை - 1 சிறிய துண்டு 
பிரிஞ்சி இலை - 1 சிறிய இலை 
கிராம்பு - 1 
சோயா சாஸ் - 1/2 ஸ்பூன்
டோமடோ சாஸ் - 1/2 ஸ்பூன் 
புதினா - 6 இலைகள் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

  • முதலில் வெங்காயம் ,தக்காளி சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும் .
  • பட்டாணியை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் 
  • கடாயில்  ,எண்ணெய் விட்டு அதில் பட்டை ,கிராம்பு ,பிரிஞ்சி இலை ,விட்டு அதனுடன் சீரகம் ,இஞ்சி ,பூண்டு ,சேர்த்து வதக்கவும் .
  • அதனுடன் நறுக்கிய பல்லாரி சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி அதனுடன்  காலிபிளவர் ,குடைமிளகாய் ,தக்காளியும் சேர்த்து வதக்கவும் .
  • அதில் பட்டாணி ,மிளகாய் தூள்,மல்லித்தூள் ,கரம் மசாலாத்தூள் ,மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும் .
  • இதனுடன் சிறிது தண்ணீர் தெளித்து ,மூடிவிட்டு வேகவிடவும்.
  • இறுதியாக சோயா சாஸ், தக்காளி சாஸ் ,புதினா சேர்த்து 1 நிமிடம் வேகவிட்டு இறக்கவும் .
  • உங்கள் சுவைக்கு ஏற்ப காரத்தை கூட்டிக்கொள்ளலாம் .
  • இது சப்பாத்தி ,ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் . 



1 கருத்து:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...