
உனக்கென்று
எழுதிய
கடவுளின் பட்டியலில்,
என் பெயரும்.....
எழுதிய
கடவுளின் பட்டியலில்,
என் பெயரும்.....
எப்படி என்றே
தெரியாமல் ,
காலம் காட்டிய
திசையில்
பயணித்து விட்டோம் .....
திரும்பிப்பார்க்கையில்
இன்னும் இரு
உயிர்கள் ,
நம் வாழ்க்கையில் .....
ஏனென்று தெரியாத
சில மாற்றங்கள் ....
வாழ்வை மாற்றிய
சில தருணங்கள் ....
இடை இடையே தோன்றிய
ஊடல்கள் ...
மீண்டும் கடக்க இயலா
சில நினைவுகள் ....
வருடங்கள் கடந்தும்
வாழ்வில் மாற்றமில்லை ....
மாறாத அன்போடு ,
மனங்களிரண்டும்
கரம் கோர்த்து
காத்திருப்போம் ...
இன்றளவும் எனக்குள்
ஒரு நம்பிக்கை ...
எத்துணை துயரிலும்
என்னுடன் நீ
வருவாய் என
நம்பிக்கையில் நான் .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....