சனி, 11 ஜூலை, 2015

கோதுமை புட்டு /wheat flour puttu

இந்த புட்டு மிகவும் சுவையானது .எனது அத்தையின் ரெசிபி படி செய்தது . மிகவும் சத்தானது . 

புட்டு மாவு செய்ய  :

கோதுமை - 1 கி 
கோதுமையை சாதம் வேகவைப்பது போல வேக வைத்து , வடித்துக்கொளவும் .பின்பு வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும் .

புட்டு செய்ய :

தயாரித்து வைத்த கோதுமை புட்டு மாவு - 1 கப் 
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன் 
வெல்லம் - 3 ஸ்பூன் (துருவியது )
ஏலக்காய் தூள் - சிறிது 
உப்பு - சிறிது 
நெய் - சிறிது 
முந்திரி - 6

செய்முறை :

  • கோதுமை புட்டு மாவை கொதிக்கும் நீர் சேர்த்து புட்டு செய்யும் பதத்துக்கு கிளறிக்கொள்ளவும் 
  • பின் அதை தேங்காய் துருவல் சேர்த்து ,இட்லி தட்டில் வேக விடவும் 
  • வெந்த பிறகு அதில் ஏலக்காய் ,வெல்லம் கலந்து விடவும் 
  • இறுதியாக நெய்யில் முந்திரி வறுத்து  கலந்து சூடாக பரிமாறவும் .
  • சுவையான கோதுமை மாவு புட்டு தயார்

1 கருத்து:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...