மிகவும் சத்தான சுவையான வாழைப்பூ பொரியல் செய்யலாம் வாங்க ...
இது எல்லா வயதினருக்கும் மிகவும் நல்லது ....
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ - 1 கப் (பொடியாக நறுக்கியது )
துவரம்பருப்பு - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய் - தாளிக்க
கடுகு - கால் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது )
செய்முறை :
- முதலில் வாழைத்தண்டை நரம்பு நீக்கி , பொடியாக நறுக்கி , அரிசி கழுவிய தண்ணீரில் ,சிறிது மஞ்சள் தூள் போட்டு அதில் அறிந்த வாழைப்பூவை போட்டு வைக்கவும் . இப்படி செய்வதால் வாழைப்பூ கறுத்துப் போகாது .
- பிறகு தேவையான பொருட்களை தயாராக வைக்கவும் .துவரம் பருப்பை பத்து நிமிடம் சிறிது தண்ணீரில் ஊற விடவும்.
- பிறகு கடையில் எண்ணெய் விட்டு , தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும் .
- வெங்காயம் வதங்கியதும் அதில் , வாழைப்பூவையும் ,துவரம் பருப்பையும் தண்ணீரில் இருந்து வடிகட்டி ,அதில் போடவும் .
- ஒரு நிமிடம் கிளறி , அதனுடன் மிளகாய் தூள் ,மல்லி தூள்,உப்பு சேர்க்கவும் .
- அதில் 1 கப் தண்ணீர் விட்டு மூடி வேக விடவும் .
- பிறகு நீர் சுண்டும் வரை அவ்வப்போது , கிளறி விடவும் .
- நீர் நன்கு சுண்டி வந்த பின்பு அடுப்பில் இருந்து இறக்கவும் .
- இதை சாம்பார் ,ரசம்,மோர் சாதத்துடன் பொரியலாகவோ ,அல்லது வெறும் சாதத்துடனோ பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்..
- sending this to : http://anuzhealthykitchen.blogspot.in/2012/07/south-indian-kitchen-series-event-1.html
- http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183
சூப்பர் ஹெல்தி பொரியல்.
பதிலளிநீக்குsuper healthy vazhaipoo poriyal...
பதிலளிநீக்குthanks a lot dear sisters..
பதிலளிநீக்கு