வியாழன், 2 ஜனவரி, 2014

பொட்டுகடலை லட்டு (roasted gram ladoo )


தேவையான பொருட்கள் :

பொட்டுகடலை -1 கப்
சர்க்கரை - 1/2 கப் 
நெய் - கால் கப் (உருக்கியது )
ஏலக்காய் தூள் - கால் ஸ்பூன் 
முந்திரி - 10

செய்முறை :

  • பொட்டுகடலையை  வாணலில் எண்ணெய் விடாமல் 2 நிமிடங்கள்,நல்ல வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும் .
  • அதை ஆறவிட்டு மிக்ஸியில் நன்கு பொடித்துக்கொள்ளவும்.
  • சர்க்கரையும் பொடித்து  வைக்கவும்.
  • பொடித்தவற்றை ஒன்றாக சேர்த்து சலித்துக் கொள்ளவும் .
  •  வாணலில் சிறிது நெய் விட்டு உடைத்தமுந்திரிகளை சேர்த்து வறுத்துக்கொள்ளவும் .
  • நெய்யை  1 நிமிடம் சூடு செய்து , பொடித்து வைத்த கலவையுடன் சேர்க்கவும்.அதனுடன் ஏலக்காய் தூள் ,வறுத்த முந்திரி சேர்த்துக்கொள்ளவும் .  
  • இப்போது நெய்,பொடித்த மாவுடன்  நன்கு  பரவுமாறு  கிளறிக்கொள்ளவும்.
  • நெய் கலந்த மாவு சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடிக்கவும் .
  • இப்போது சுவையான மணமான ,சத்தான பொட்டுகடலை லட்டு தயார் . .


4 கருத்துகள்:

  1. Hi Sangeetha,
    Wish you and ur family a Very Happy New Year, sorry for the late wishes.
    I also missed your wonderful kavidhais and lovely post. Happy to catch up again with you.
    Very lovely pottukadalai ladoo, super...
    regards...

    பதிலளிநீக்கு
  2. sharmi kandippa seithu parunga...
    priya happy to see u here . miss u a lot ...happy new year and advance happy pongal dear

    பதிலளிநீக்கு
  3. வாவ் ! பார்க்கவே அழகும் ருசியும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...