அதிகாலை பொழுதொன்றில்
பள்ளிக்கூட வாசலொன்றில்...
அம்மாவின் விரல் பிடித்து,
அன்பாய் முத்தமிட்டு,
கையை காற்றிலசைத்து,
விடைபெற்று செல்கிறாள்...
விமலா...
பள்ளிக்கூட வாசலொன்றில்...
அம்மாவின் விரல் பிடித்து,
அன்பாய் முத்தமிட்டு,
கையை காற்றிலசைத்து,
விடைபெற்று செல்கிறாள்...
விமலா...
பழங்கால கதைகள் பல
களிப்புடன் கேட்டுகொண்டே,
தாத்தாவின் அரவணைப்பில்,
அன்பாய் விடைபெற்றாள்
வித்யா...
களிப்புடன் கேட்டுகொண்டே,
தாத்தாவின் அரவணைப்பில்,
அன்பாய் விடைபெற்றாள்
வித்யா...
இரு சக்கர வாகனத்தில் ,
அப்பாவின் முத்தம்பெற்று ,
அழகாய் நடந்து சென்றான்
அரவிந்த்.....
அப்பாவின் முத்தம்பெற்று ,
அழகாய் நடந்து சென்றான்
அரவிந்த்.....
எதிர்கால கனவுகளை
எளிமையாய் விளக்கி
கொண்டே, பாட்டியுடன்
அசைந்து வந்தாள்
திவ்யா...
எளிமையாய் விளக்கி
கொண்டே, பாட்டியுடன்
அசைந்து வந்தாள்
திவ்யா...
அவசர வேகத்தில்
வந்த ஆட்டோ ஒன்றும்,
குழந்தைகளை
இறக்கிவிட்டு,
பறந்து செல்ல,
பவ்யமாய் நடைபோட்டன
பிஞ்சு குழந்தைகள்...
வந்த ஆட்டோ ஒன்றும்,
குழந்தைகளை
இறக்கிவிட்டு,
பறந்து செல்ல,
பவ்யமாய் நடைபோட்டன
பிஞ்சு குழந்தைகள்...
ஒரே வண்ண
உடையுடுத்தி
ஒற்றுமையாய் சென்ற
குழந்தைகளை...
உடையுடுத்தி
ஒற்றுமையாய் சென்ற
குழந்தைகளை...
விழித்திரையில் கண்ணீருடன்,
வித்தியாசமாய் பார்த்துக்கொண்டே,,
குப்பைக் கோணியை
சுமந்து சென்றான்
குமரன்...
வித்தியாசமாய் பார்த்துக்கொண்டே,,
குப்பைக் கோணியை
சுமந்து சென்றான்
குமரன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....