சனி, 18 ஜூன், 2011

என் உயிர்த்தோழி.....


பால்ய கால பருவங்களில்
பட்டாம்பூச்சி பிடித்து,
பறக்கவிட்டு கைதட்டி
குதித்தோம்....
பள்ளிக்கூட பருவங்களில்
எழுதாமல் பாசாங்கு செய்து,
அரட்டை அடித்தோம்....
தேர்வுக் கூடங்களில்
விடைகளை மறந்து,
திருதிருவென விழித்தோம்...
மழலை காலங்களில்
மணல் மாளிகைகளும்,
களிமண் பொம்மைகளும்
பங்கெடுத்து கொண்டன
நம் விளையட்டுகளில்....
பாடல் வரிகளெல்லாம்
பாடமாய் கற்று
பாடிக்களித்தோம்.....
விடுமுறை நாட்களிலும்,
விடுமுறை விட்டதில்லை
நம் சந்திப்பிற்கு....
சிறுசிறு சண்டைகளில்
வனவிலங்குகளின்
பெயர்களால்
அர்ச்சித்துக்கொண்டோம்...
நம் முகவாட்டம் காணச்
சகிக்கா நம் பெற்றோர்
சேர்த்து வைப்பர்
ஸ்நேகிதி என்று....
கல்லூரி கதைகளை
விடுமுறை நாட்களில்
விவரித்து மகிழ்ந்தோம்...
நீ ஓர் மூலையிலும், நான்
ஓர் மூலையிலும், திருமணம்
திருப்பிபோட்டது நம் வாழ்வை...
இயந்திர வாழ்க்கைக்கு
இடையே அவ்வப்போது
தொடரும் தொலைபேசி
கதைகளுடன் சிக்கி
கிடக்கிறது நம் நட்பு....
உன் நினைவுகள் என்னை
தழுவும்போது, தானாகவே
வந்து விழுகின்றன
கண்ணீர் துளிகள்....
காலமும் கடக்கிறது
நம் கனவுகளை கிழித்து........
நன்றி http://www.arusuvai.com/tamil/node/19108

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...