சுலபமான இந்த பொரியல் சுவையானதும் கூட .....
தேவையான பொருட்கள் :
ஆடு ரத்தம் - 1
கடுகு - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கு
செய்முறை :
- முதலில் ரத்தத்தை சுத்தம் செய்து கொள்ளவும் .
- கடாயில் தண்ணீர் வைத்து , அதில் ஒரு பாத்திரத்தில் ரத்தத்தில் உப்பு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும் .
- வெந்த பிறகு ,ரத்தத்தை சிறு துண்டுகள் போல வெட்டி வைக்கவும்
- வெட்டிய ரத்தத்தை மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் சேர்த்து பிசறி பத்து நிமிடம் அப்படியே வைக்கவும் .
- பின் கடாயில் , எண்ணெய் விட்டு , கடுகு ,காய்ந்த மிளகாய் , உளுத்தம்பருப்பு ,பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து ,அதனுடன் ரத்ததுண்டுகள் சேர்த்து பிரட்டி 5 நிமிடம் கழித்து இறக்கவும் .
- சுவையான ரத்தப்பொரியல் தயார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....