முதல் முறையாக இந்த அல்வா செய்து பார்த்தேன் .சுவை நன்றாக இருந்தது
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய்(வெள்ளை )-2கப்
சர்க்கரை -1கப்
முந்திரி -10
ஏலக்காய் தூள்-1ஸ்பூன்
நெய்-4ஸ்பூன்
கலர் பவுடர்-சிறிது
செய்முறை:
⭐️ முதலில் பூசணிக்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.
⭐️பின் வாணலில் சிறிது நெய் விட்டு அதில் முந்திரியை சிவக்க வறுத்து,தனியே வைக்கவும்.
⭐️பின் மீதி நெய் விட்டு ,அதில் துருவிய பூசணிக்காய் அதன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
⭐️தண்ணீர் சுண்டி அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக விடவும்
⭐️இதனுடன் சர்க்கரை ,கலர் பவுடர் சேர்த்து ,நன்கு கிளறவும்
⭐️பின் ஏலக்காய்,வறுத்த முந்திரி சேர்க்கவும்
⭐️சர்க்கரை நீர் சுண்டி ,நெய் பிரியும் வரை நன்றாக கிளறவும்
⭐️நெய் பிரிந்து வரும் சமயம் இறக்கவும்
⭐️சுவையான பூசணி அல்வா தயார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....