மிக சுலபமான டேஸ்ட்டான இந்த வறுவல் எளிய சமையலுக்கு சிறந்த சாய்ஸ் ...கண்டிப்பா முயற்சித்து பாருங்க ...
தேவையான பொருட்கள் :
முட்டை -3
பெரிய வெங்காயம் - 1(பெரியது )
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - 1 கொத்து
மிளகுதூள் - 1 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
- முதலில் முட்டையை வேகவைத்து ,ஆறியதும் தோல் உரித்து ,இரண்டாக வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும் .
- பின் கடாயில் எண்ணெய் விட்டு ,காய்ந்ததும் வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .
- இதனுடன் மிளகுத்தூள் ,சோம்புத்தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும் .
- வெங்காயம் நன்கு வதங்கும் வரை , வேகவிடவும் .
- இதனுடன் முட்டையும் சேர்த்து ,வேகவிடவும் .இதுபோல இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு இறக்கி சூடாக பரிமாறவும்
- மதிய உணவுக்கு சிறந்த சைட் டிஷ் இது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....