திங்கள், 13 ஏப்ரல், 2015

சிக்கன் சூப் /chicken soup

மிகவும் எளிய சூப் இது ..உங்கள் ஞாயிறுகளை மேலும் சுவையாக்கும் ...


தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1கப் 

சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
சீரகத்தூள்  -1/4 ஸ்பூன் 
மிளகுதூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன் 
மல்லித்தூள் -1/2ஸ்பூன் 
இஞ்சிபூண்டு விழுது - 1/2ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை - 1கொத்து 
மல்லித்தழை - சிறிது 

செய்முறை :


  • வெங்காயத்தை மிக்ஸ்யில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும் .தக்காளியை நறுக்கிகொள்ளவும் 
  • ஒரு சிறிய குக்கரில் எண்ணை விட்டு  சூடானதும் ,அரைத்த வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது ,கருவேப்பிலை சேர்த்து வதக்கி ,மஞ்சள் தூள் ,கோழி துண்டுகள் சேர்த்து வதக்கவும் .இதனுடுடன் மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும் .
  • தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும் .
  • இறக்கியதும் மல்லித்தழை ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் சேர்த்து கிளறி பரிமாறவும் ...




2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...