புதன், 20 ஆகஸ்ட், 2014

வெங்காய தக்காளி குருமா (tomato onion kurma)

மிகவும் பிரபலமான சிம்பிளான குருமா இது ..சுவையும் பிரமாதமாக இருக்கும். செய்து பாருங்க 


தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் - 1 (பெரியது )
தக்காளி - 2 (சிறியது )
பச்சை மிளகாய் - 2 
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து 
கடுகு - 1/ 2 ஸ்பூன் 
சோம்புத்தூள் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
கடலை மாவு - 1 ஸ்பூன் 

செய்முறை :

  • முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சேர்த்து வெடித்ததும் , கடலை பருப்பு ,பச்சைமிளகாய் ,வெங்காயம்,கருவேப்பிலை சோம்புத்தூள்  சேர்த்து  வதக்கவும் 
  • வெங்காயம் வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும் .
  • இதனுடன் பின் உப்பு , மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் , மஞ்சள் தூள் சேர்த்து , தண்ணீர் விட்டு மூடி  கொதிக்கவிடவும் .
  • வெங்காயம் ,தக்காளி வெந்தவுடன் , அதில் கடலைமாவு +தண்ணீர் சிறிது கலந்து கரைத்து அதை கொதிக்கும் குருமாவில் விடவும் . (நிறைய தண்ணீர் சேர்க்க தேவையில்லை .கடலைமாவு கரையும்அளவு இருந்தால் போது ).
  • எல்லாம் சேர்ந்து நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
  • கடலைமாவுக்கு பதில் இட்லி மாவு கூட 1 ஸ்பூன் எடுத்து  தண்ணீரில் கரைத்து சேர்க்கலாம் .
  • இதை இட்லி ,தோசை , சப்பாத்தி க்கு நல்ல சுவையாக இருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...