ஞாயிறு, 17 நவம்பர், 2013

சின்ன சின்ன நினைவுகள் ....

நினைவலைகளில் 
நீந்திச் செல்கிறேன் 
பின்னோக்கி ..

பாட்டியின்
மடி அமர்ந்து 
நிலாச்சோறு 
உண்ட நேரங்களை ... 

மாமாவின் 
மடியில் 
அமர்ந்து 
மழலை பேசிய  
நினைவுகளை ....

மாட்டு வண்டி 
மணல் பறக்க ,
சுற்றத்துடன் 
குலசாமி  கோயில் 
சென்று சிலிர்த்த 
பயணங்களை ...


அப்பாவை 
நச்சரித்து ,
அவருடன்   
சைக்கிளில் 
சுற்றி வந்த
பயணங்களை ..

குறும்புகள் செய்து 
அம்மாவின் 
அடிக்கு 
பயந்து ,
அப்பாவின் 
பின்னால் 
ஒளிந்த 
நிமிடங்களை   ...


பள்ளிக்கூடம் 
போகாமல் 
பொய்க்காரணம் சொல்லி 
தாத்தா மடி பொதிந்து 
அழுத நினைவுகளை ...

எப்போதாவது 
கிடைக்கும் 
பத்து பைசா 
பணத்தில் 
பெட்டிக்கடை 
பாட்டியிடம் 
ஒத்த பைசா 
மிட்டாய் 
வாங்கிய 
நிமிடங்களை  ...

புத்தகத்தில் 
குட்டிபோட 
மயிலிறகை 
வைத்து ,
குட்டி போடாத 
ஏக்கத்தில் 
அழுத 
அழுகைகளை ...

உப்பு மூட்டை 
தூக்கச்சொல்லி 
தாத்தாவை 
நச்சரித்த
நிமிடங்களை ...

நினைக்கையில் 
எல்லாமே இனிக்கிறது ..
மீண்டும் 
மழலையாக 
மனம் 
துடிக்கிறது ...

ஏனோ 
ஏக்கம் மட்டும் 
மிஞ்ச ,நீர்த்துளிகள் 
நிறைந்து வழிகின்றன 
கண்களில் ...







2 கருத்துகள்:

  1. Wow!! Wow !! Sangeetha, I have become your great fan, beautiful poem, it reminds so many things of my child hood also. U can send ur poems to some magazines, so stunning. What is ur native??

    பதிலளிநீக்கு
  2. thanks a lot dear sister ..i am really frozen for ur comment ...my native kattumannarkoil near chidambaram

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...