செவ்வாய், 20 செப்டம்பர், 2016

பேபி கார்ன் மஞ்சூரியன் /Baby corn manchurian


முதன் முதலாக பேபி காரன் வாங்கி முயற்சித்தேன் ..மிகவும் அருமையாக இருந்தது ..செய்த விரைவில் தீர்ந்தது ஆச்சர்யமே ! முக்கியமாக என் குழந்தைகள் ரசித்து சாப்பிட்டனர் ...

தேவையான பொருட்கள் 1 :

பேபி கார்ன் - 10
கார்ன் மாவு - 1/4 கப் 
மைதா- 2 மற்றும்  1/2 கப் 
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் 
சிவப்பு மிளகாய்த்தூள்- 1/4 ஸ்பூன் 
தண்ணீர் - 1/4 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
எண்ணெய் - பொரிக்க 

தேவையான பொருட்கள் 2:

பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/4 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1(பெரியது )
குடைமிளகாய்- பாதி ( நறுக்கியது )
வெங்காயத்தாள்- சிறிது 
சோயா சாஸ் - 2 ஸ்பூன் 
தக்காளி சாஸ் - 3 ஸ்பூன் 
மிளகாய் சாஸ் - 1 மற்றும் 1/2 ஸ்பூன் 
மிளகுத்தூள்- 1/4ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு
சிவப்பு கலர் பவுடர் - சிறிது (தேவைப்பட்டால் )

செய்முறை :

  • பேபி கார்ன் ஐ நான்காக குறுக்கும் நெடுக்கும் வெட்டிக் கொள்ளவும்  .
  • அதேபோல , பச்சை மிளகாயை நீளமாக வெட்டிக்கொள்ளவும்.
  •  வெங்காயம் ,குடைமிளகாய் ,வெங்காயத்தாள் , ஆகியவற்றையும் நறுக்கிக் கொள்ளவும் .
  • தேவையான பொருட்கள் 1 ல் உள்ள, பேபிகார்ன்எ,ண்ணெய் தவிர மற்ற எல்லா வற்றையும்  நன்கு கலக்கவும் . அதில் பேபி கார்ன் துண்டுகளை முக்கி எண்ணையில் பொரித்து எடுக்கவும் .
  • பின் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் ,பச்சை மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது , உப்பு  சேர்த்து வதக்கவும் 
  • இதனுடன் குடைமிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும் .
  • வெங்காயம் நன்கு வதங்கியபின் , சாஸ் வகைகள் , வெங்காயத்தாள் ,கலர் பவுடர் ,சேர்த்து நன்கு கிளறவும் .
  • வெங்காயம் வதங்கும் முன் சாஸ் சேர்த்தால் , நறுக்கென்று இருக்கும் . எனவே இதை கவனத்தில் கொள்ளவும் .
  • பின் இதனுடன் பொரித்த பேபி கார்ன் துண்டுகள் சேர்த்து ,  ஓரிரு நிமிடங்கள்நன்கு கிளறி , சூடாக  பரிமாறவும் ...
  • அவ்வளவு தான் சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் தயார் ..








2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...