உன் மீதான என் எண்ணங்களை ,
அரை நொடியில் அறுத்தெடுக்க
உன் கோபத்தீயில் கருகிச் சாக ,
கண்ணீருடன் காத்திருப்பேன் அன்பே!!!
கிழிந்த இதயம் கொண்டு ,
கிழவியாகும் வரை
காத்திருப்பேன் அன்பே...
அன்பு செய்யும் நேரம் ,
அடடா ! இவன் போல யாருமுண்டோ
என எண்ண வைப்பாய் !!
கோபம் கொள்ளும் அந்நேரம் ,
ஆயிரம் சூரியனாய் சுட்டெரிப்பாய் !
போதுமிது ! போதுமிது !! என்னவனே !!!!
உன் கோபத்தீயை என் கண்ணீர்க்கடல்
அணைத்திடுமோ?
அல்லது
என் கண்ணீரும் உன் முன்னே பயந்து
கரைந்திடுமோ?
விடை சொல்
என்னுயிரே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....