இந்த கோபி பெப்பர் ப்ரை எளிமையான ரெசிபி .நிச்சயம் உங்கள் குடும்பத்தினரை கவரும் .
தேவையான பொருட்கள் :
பஜ்ஜி செய்ய :
காலிபிளவர் - 1 கப்
கடலை மாவு - 2 ஸ்பூன்
காரன் ப்ளோர் - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பஜ்ஜி மாவு - 2ஸ்பூன்
வதக்க :
பெரிய வெங்காயம் - 2(பெரியது ,நீளமாக வெட்டியது )
தக்காளி - 1 (பெரியது ,நீளமாக வெட்டியது )
மிளகுத்தூள் - காரத்துக்கு ஏற்ப
கருவேப்பிலை - 4 கொத்து
செய்முறை :
- மேலே சொன்ன பொருட்களை எல்லாம் கலந்து பஜ்ஜி போல பொரித்து தனியாக வைக்கவும் .
- அதனுடன் கருவேப்பிலையும் பொரித்து தனியே வைக்கவும் .
- பின் கடாயில் எண்ணெய்(அ ) வெண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
- கண்ணாடி போல நன்கு சுருள வதக்கவும் .
- இதனுடன் கருவேப்பிலை இலைகளையும் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி , உப்பு ,மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும் .
- வெங்காயம் நன்கு வதக்கியதும் ,காலிபிளவர் துண்டுகள் சேர்த்து கிளறி 1 நிமிடம் கழித்து இறக்கி ,சூடாக பரிமாறவும் .
- சுவையான கோபி பெப்பர் ப்ரை தயார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....