ஞாயிறு, 30 நவம்பர், 2014

vegetable manchurian /வெஜிடபள் மஞ்சுரியன்


மிகவும் சுவையான வெஜிடபள் மஞ்சுரியன் ஒரு indo-  chinese   ரெசிபி . இதை செய்ய தண்ணீரே தேவையில்லை  என்பது இன்னொரு தகவல் 

தேவையான பொருட்கள் :

மைதா -1/3 கப் 
கார்ன் ப்ளோர் - 2 ஸ்பூன்
கேரட் - 3/4 கப் (துருவியது)
முட்டைகோஸ் -  - 3/4 கப் (துருவியது)
குடைமிளகாய் - 1/4 கப் (மிக பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது )
இஞ்சி பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாஸ் - 2 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
மிளகாய் சாஸ் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
மல்லிதழை (அ ) வெங்காயதாள் - அலங்கரிக்க
எண்ணெய் - பொரிக்க

செய்முறை :


  • முதலில் துருவிய காய்களை ஒன்றாக கலந்து ,அதனுடன் மைதா ,கார்ன் ப்ளோர் ,உப்பு , பாதி இஞ்சி பூண்டு விழுது ,மிளகுத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து , அதை உருண்டைகளாக பிடிக்கவும் .உருண்டைகள் பிடிக்கும் போது தண்ணீர் சேர்க்க தேவையில்லை .காய்களின் ஈரப்பதமே போதுமானது .
  • வாணலில் எண்ணெய் காய விட்டு ,அதில் இந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும் .
  • பின் வாணலில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு , வெங்காயம் , பச்சை மிளகாய் ,  மீதி இஞ்சி பூண்டு விழுது  ,சிறிது உப்பு (விரும்பினால் வதக்கும் போது சிறிது ,நறுக்கிய குடை மிளகாய் சேர்க்கலாம் )சேர்த்து வதக்கவும் .
  • இதனுடன்  சோயா சாஸ் ,மிளகாய் சாஸ் , தக்காளி சாஸ் ,மிளகுத்தூள் சேர்த்து வதக்கி ,அதனுடன் உருண்டைகளை சேர்த்து ,விரும்பினால் சிவப்பு கலர் பொடி சேர்த்து நன்கு பிரட்டி மல்லிதழை தூவி இறக்கவும் .
  • சுவையான வெஜிடபள் மன்சுரியன் தயார் .





5 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. கவியாழி அவர்களே ...வருக வருக ... தங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி

      நீக்கு
  2. வெஜிட்டபிள் மஞ்சூரியன் பார்க்கவே சூப்பர் !! எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...