flowers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
flowers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

my clicks 19

 வாழ்வில் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிக்க தெரிந்தால் இனிமையாகும் .சில சிறிய விஷயங்கள் இங்கே இத்தனை அழகை தாங்கி ,உங்கள் கண்களுக்கு விருந்தாக இந்த படங்கள் ....

வாழைப்பூவில் சிதறிக்கிடக்கும் வைர முத்துக்கள் ... zoom செய்து பார்க்கவும் .
மனதை கவர்ந்த மனத்தக்காளி பூக்கள் .....
பூக்கள் மட்டுமா அழகு இலைகள் கூட புது அழகு ....

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

my clicks 18

கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் சென்ற போது ,இயற்கையின் கொடையை கண்களால் ரசித்து ,கேமராவில் பதித்து ,இங்கே உங்களின் பார்வைக்கும் பகிர்வதில் மகிழ்கிறேன் ....
மலர் கண்காட்சியில் என் மனம் கொத்திப்போன பூக்கள் ,இதோ உங்களுக்கும் ......


இதன் முழு அழகை ரசிக்க இந்த படத்தை  zoom செய்து பார்க்கவும் .சட்டென பார்க்க அயல்நாட்டின் ஓவியத்தை ஒத்த அழகிது  ...


பூக்களின் அரசி புன்னகை பூக்க ,கண்கவர் நிறத்தில்வீற்றிருக்கும் அழகை பாருங்கள் ...

ஞாயிறு, 21 மே, 2017

My clicks 18

புகைப்படங்கள் நம் வாழ்வின் சில முக்கிய தருணங்களை தாங்கி நிற்கும் ..எனக்கும் இந்த புகைப்படங்கள் அது போலத்தான் சில நெகிழ்வான நிமிடங்கள் சுமந்து இங்கே உங்களுக்காக .....
மஞ்சள் நிற மலரொன்று மனம் வருடிப்போன சமயம் எடுத்தது
எங்கள் வீதி பிள்ளையார் கோவிலின் கம்பீர அழகு...மஞ்சள் நிற மலரொன்று மனம் வருடி போகும் சமயம் எடுத்தது

எங்களோடு சில காலம் வாழ்ந்த
சின்னஞ்சிறு குருவிகளின் நினைவுப்பெட்டகமாய் இந்த நிழல்படம் ...

செவ்வாய், 1 நவம்பர், 2016

my clicks 15


நம் இயந்திர வாழ்வின்ஒ வ்வொரு நாளும் நம்மை அறியாமல் பல அழகிய நொடிகளை கடந்திருப்போம்.... நாம் ரசிக்க மறந்த சில காட்சிகள்இப்போதாவது இங்கே  

பிள்ளையார் எத்தனை வடிவம் கொடுத்தாலும் அழகாகவே இருப்பார் ..பிடி மண் முதல் மஞ்சள் பிள்ளையார் வரை எல்லாமே அழகு இவரிடம் ...வித விதமாய் பிள்ளையார் சிலைகள் எங்கள் வீட்டில் ....அதில் ஒன்று இதோ இங்கே ..


பாகற்காய் பூக்கள் அச்சின்னசிறு எறும்பிற்கும் விருந்தளிக்கிறதோ ....



புற்களுக்கு இடையே மலர்ந்த வெண்தாமரை போல மலர்ந்திருக்கும் இவள் யாரோ ....

சனி, 1 அக்டோபர், 2016

my clicks 14

இயற்கையின் அழகை ரசிக்க , சின்ன சின்ன நிகழ்வுகளிலும் ரசிக்கலாம்

ஒரே செடியில் மலர்ந்த இரு வண்ண மலர்கள் .. அத்தனை அழகையும் இந்த சின்னஞ்சிறு பூக்கள் சுமந்து சிரிப்பதை பாருங்கள் ..
மலேசிய பயணத்தில் திடீரென பெய்த மழை துளிகள்  எங்கள் வாகன கண்ணாடியில் இட்ட முத்துக்கோலம்
அமைதியின் மொத்த உருவமாய் இந்த புத்தர் சிலை ...பார்க்கும் நம் மனதையும் சாந்தமாக்கும் ....

செவ்வாய், 15 டிசம்பர், 2015

my clicks 9


இயற்கை அளித்த அழகை ஒவ்வொரு சின்ன விஷயங்களிலும் காணலாம் .இதோ நீங்களும் ரசிக்கலாம் வாங்க 
மாங்கனி பூக்கள் சூரியனுக்கு வணக்கம் சொல்லி சிரிக்கும் அழகை பாருங்கள் 

மழையில் நனைந்த ரோஜாவின் அழகு

குண்டுமணிகள் போல காட்சி தரும் மணதக்காளி 


சனி, 28 நவம்பர், 2015

my first wall painting



wall painting செய்ய நிறைய நாள் திட்டமிட்டு இன்று முயற்சித்தும் விட்டேன் .எனது முதல் wall painting இது . acrylic colours கொண்டு செய்தது இது .

புதன், 18 நவம்பர், 2015

My daughter Sona's creation -sponge roses/எனது மகள் சோனா செய்த ஸ்பாஞ்ச் பூக்கள் ..

எனது மகள் சோனா செய்த ஸ்பாஞ்ச் பூக்கள் இது .புதிய சட்டை வாங்கும்போது அதனுள் இருக்கும் sponge கொண்டு செய்தது .நீங்களும் முயற்சிக்க இதோ லிங்க் http://snowwhitesona.blogspot.in/2013/12/sponge-flowers-on-paper-plate.html

திங்கள், 26 அக்டோபர், 2015

my clicks 8




இவை எல்லாமே எனது phone கொண்டு எடுத்தவைகள் தான் ... ஒரு ரோஜா மலரின் மொட்டு முதல் பூ வரை எடுத்து இருக்கிறேன் ..
இந்த  மொட்டை மூடி இருக்கும் இதழ்களின் ஓரங்கள்  வெண்ணிறமாக இருப்பதை பாருங்கள் ... அத்தனை அழகு ...
அடுத்த நாள் எடுத்தது இதழ்களை விரித்து புன்னகைக்கும் தருணம் எடுத்தது ...

இதோ முழுதும் மலர்ந்த பூக்களின் ராணி ..... மகுடம் சூடி சிரிக்கும் அழகை பாருங்கள் ...

திங்கள், 11 மே, 2015

recycled craft work from waste cd and paper

 இந்த பூக்கள் பேப்பர்,உபயோகிக்காத cd ,பேப்பர் கப் இவற்றை கொண்டு செய்தது .

வியாழன், 23 அக்டோபர், 2014

my clicks 4

பூக்களை ரசிப்பது எல்லோருக்கும் பிடிக்கும் .அதுவும் அதன் செடியில் இருக்கும் போது ரசிக்க மிகப்பிடிக்கும் .இது எல்லாமே மொபைல் மூலம் எடுத்த போட்டோக்கள் ....
இது எங்கள் வீட்டு ரோஜா  இதழ்களை விரித்து மலரும் தருணம் .
இது மே மாதம் மட்டுமே மலரக்கூடிய ஒரு வகை அறிய மலர் .அதனாலே இதன் பெயர் "மே பிளவர் " ஆம் .இது என் உறவினர் வீட்டில் எடுத்தது .


இது உறவினர் வீட்டு தோட்டத்தில் எடுத்தது .கண் திருஷ்டிக்காக வைக்கும் செடியின் மலராம் இது ...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...