photos லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
photos லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஏப்ரல், 2018

my clicks 24

மிகவும் விரும்பி ரசித்த தருணங்களை, இந்த புகைப்படங்கள் வாயிலாக  உங்களுடன் பகிர்கிறேன்.

சிறு வயது முதல் இன்று வரை , ரசித்து ரசித்து பிரமித்துப்போன என்றும் தன் கம்பீர அழகை இழக்காமல் ,பிரமாண்டமாய் நிற்கும் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோபுர அழகு .....
 இருளை கிழித்து ,தன் மெல்லிய ஓளியை இதமாக பரப்பிச் சிரிக்கும் மெழுகுவர்த்தியின் அழகு ....
 காட்டுமன்னார்கோவில் வீர நாராயண பெருமாள் சன்னதியின் கோபுர அழகு ...

சனி, 4 நவம்பர், 2017

My clicks 21

நான் ரசித்த மனம்  வருடும் நிமிடங்கள் இந்த மயிலிறகும் ,மலர்களும் உங்களுக்காக இங்கே ...
வர்ணங்கள் எல்லாம் சேர்ந்த தூரிகையாய் இந்த மயிலிறகுகள் ......
மழை மாலைப்பொழுதை வரவேற்க இந்த  மலர்களும் ,மொட்டுகளும்  .....

இரட்டை ரோஜாக்கள் இனிப்பாய் மலர்ந்த தருணம் .....

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

my clicks 19

 வாழ்வில் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிக்க தெரிந்தால் இனிமையாகும் .சில சிறிய விஷயங்கள் இங்கே இத்தனை அழகை தாங்கி ,உங்கள் கண்களுக்கு விருந்தாக இந்த படங்கள் ....

வாழைப்பூவில் சிதறிக்கிடக்கும் வைர முத்துக்கள் ... zoom செய்து பார்க்கவும் .
மனதை கவர்ந்த மனத்தக்காளி பூக்கள் .....
பூக்கள் மட்டுமா அழகு இலைகள் கூட புது அழகு ....

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

my clicks 18

கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் சென்ற போது ,இயற்கையின் கொடையை கண்களால் ரசித்து ,கேமராவில் பதித்து ,இங்கே உங்களின் பார்வைக்கும் பகிர்வதில் மகிழ்கிறேன் ....
மலர் கண்காட்சியில் என் மனம் கொத்திப்போன பூக்கள் ,இதோ உங்களுக்கும் ......


இதன் முழு அழகை ரசிக்க இந்த படத்தை  zoom செய்து பார்க்கவும் .சட்டென பார்க்க அயல்நாட்டின் ஓவியத்தை ஒத்த அழகிது  ...


பூக்களின் அரசி புன்னகை பூக்க ,கண்கவர் நிறத்தில்வீற்றிருக்கும் அழகை பாருங்கள் ...

ஞாயிறு, 21 மே, 2017

My clicks 18

புகைப்படங்கள் நம் வாழ்வின் சில முக்கிய தருணங்களை தாங்கி நிற்கும் ..எனக்கும் இந்த புகைப்படங்கள் அது போலத்தான் சில நெகிழ்வான நிமிடங்கள் சுமந்து இங்கே உங்களுக்காக .....
மஞ்சள் நிற மலரொன்று மனம் வருடிப்போன சமயம் எடுத்தது
எங்கள் வீதி பிள்ளையார் கோவிலின் கம்பீர அழகு...மஞ்சள் நிற மலரொன்று மனம் வருடி போகும் சமயம் எடுத்தது

எங்களோடு சில காலம் வாழ்ந்த
சின்னஞ்சிறு குருவிகளின் நினைவுப்பெட்டகமாய் இந்த நிழல்படம் ...

செவ்வாய், 1 நவம்பர், 2016

my clicks 15


நம் இயந்திர வாழ்வின்ஒ வ்வொரு நாளும் நம்மை அறியாமல் பல அழகிய நொடிகளை கடந்திருப்போம்.... நாம் ரசிக்க மறந்த சில காட்சிகள்இப்போதாவது இங்கே  

பிள்ளையார் எத்தனை வடிவம் கொடுத்தாலும் அழகாகவே இருப்பார் ..பிடி மண் முதல் மஞ்சள் பிள்ளையார் வரை எல்லாமே அழகு இவரிடம் ...வித விதமாய் பிள்ளையார் சிலைகள் எங்கள் வீட்டில் ....அதில் ஒன்று இதோ இங்கே ..


பாகற்காய் பூக்கள் அச்சின்னசிறு எறும்பிற்கும் விருந்தளிக்கிறதோ ....



புற்களுக்கு இடையே மலர்ந்த வெண்தாமரை போல மலர்ந்திருக்கும் இவள் யாரோ ....

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

wall painting 5/ wall art using my daughter's finger print

       எனது மகள் சோனா வின் விரல் அச்சு கொண்டு வரைந்தது இந்த மரம் .
இதன் இலைகள் எல்லாம் எனது மகளின் விரல் அச்சு .. வித்தியாசமான ,நினைவுப்பூர்வமான wall painting இது .

மரத்திற்கு மேலும் அழகு சேர்க்க ,பழங்கள் உதிர்வது போல உருவாக்கியுள்ளேன் ..(இரண்டாம் படம்) 

வியாழன், 25 பிப்ரவரி, 2016

my clicks 10


வண்ணங்களும் ,எண்ணங்களும் சேரும் போது ,புதிதாய் உணர்வோம் ..அப்படி உணர்ந்த தருணங்களில் கிளிக்கியது ...

மிகவும் ரசித்த pic இது .மஞ்சள் ,குங்குமத்தின் மங்கள வண்ணமும் ,தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியின் கம்பீர தோற்றமும் ,இதன் அழகை மேலும் கூட்டுது ..
எங்கள் அன்பின் அடையாளமாய் எடுத்தது ..
டிவி remote எதேச்சையாக எளிமையாக ஒரு click




ஞாயிறு, 5 அக்டோபர், 2014

my clicks 3

புத்தம் புது காலை ஒன்றில் இந்த புல் நுனியும் பனித்துளியும் ,கதை பேசும் நேரம் என் கேமரா கண்களில் ,அதை பதித்து விட்டேன் ....
எங்கள் வீட்டு ரோஜா மொட்டு காலை வணக்கம் சொல்லி சிரிக்கும்  இனிய நேரம் click செய்தது .



இந்த சிறு புல்லும் ,வைர கிரீடம் அணிந்து ,நிற்பதை பாருங்கள் .... 

திங்கள், 29 செப்டம்பர், 2014

my clicks 2

இந்த மொட்டுகள் கூட முத்து மணிகள்  அணிந்து சிரிப்பதை பாருங்கள் ...மிகவும் ரசித்து எடுத்த போட்டோ இது ...:)

இந்த  மலர்ந்தும் ,மலராத பூக்களையும் கொஞ்சம்  பாருங்க ..

பூக்கள் மட்டுமா அழகு ? மொட்டுகள் கூட அழகு ...


 எங்கள் வீட்டு லஷ்மி விளக்கு .....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...