ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

ஆள்காட்டி பறவைகள்


 சவுக்கு மரங்கள அகற்றின நிலத்தின் வழியா நடந்து போனப்போ , இந்த அதிசய முட்டைகள பார்த்தோம். அந்த நிலபக்கம் சில பறவைகள் சுத்தி, சுத்தி வரதும், ஒலி எழுப்பறதுமா இருந்துச்சி.. 

கிராமப்புறங்கள்ல இருக்கவங்க இந்த பறவையோட ஒலியை கேட்டு இருப்பீங்க ..இதுதான் சிவப்பு ஆள்காட்டி பறவைன்னு சொல்றாங்க. இந்த வகை பறவைகள் நிலத்துல தான் முட்டையிட்டு , குஞ்சு பொறிக்கும் தன்மையுடையது..சங்க இலக்கிய நூல்களான நற்றிணை, குருந்தொகை நூல்கள்ல கூட  இந்த பறவையை ‘கணந்துள்’ ணு குறிப்பிட்டு இருக்காங்க.. 
இந்த பறவைக்கு ஏன் ஆட்காட்டின்னு பெயர் வந்துச்சுன்னா , தன் முட்டைகளை நிலத்துல போட்ட பிறகு , அதற்கு ஆபத்து எதும் வந்துட கூடாதுன்னு ,அந்த பக்கம் வர மனிதர்களை வித்யாசமா  வித்யாசமான ஒலி எழுப்பி விரட்டுமாம் . இரவுப்பொழுதுகள்ல வயல்ல காவலுக்கு இருக்கவங்க இந்த பறவையோட சத்தத்த வச்சு, மனிதர்கள் நடமாட்டத்த தெரிஞ்சுப்பாங்களாம்.. முட்டையிட்ட பிறகு, அந்த முட்டைகளை ஆண் ,மற்றும், பெண் பறவைகள் இரண்டுமே பாதுகாக்குமாம். இந்த முட்டைகள் அது போடற நிலத்துக்கு ஏற்ப அதோட நிறத்த மாத்திக்கற தன்மையுடையதுன்னு சொல்றாங்க.. அதிசயமான தகவல் தானே.. தன் அடுத்த தலைமுறையை பாதுகாக்க போராடும், இந்த பறவைகள் மனிதர்கள விட மிகவும் உயர்ந்ததுன்றதுல சந்தேகமே இல்ல தானே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...