இந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......
லேபிள்கள்
- கோலங்கள் (350)
- சமையல் (106)
- கவிதைகள் (102)
- மெஹந்தி (62)
- side dish (38)
- கைவினைகள் (38)
- my clicks (24)
- ஓவியங்கள் (22)
- ஸ்நாக்ஸ் (15)
- டிபன் (13)
- wall painting (12)
- பொம்மை வேலைப்பாடு (7)
- சிந்தனை துளிகள் (4)
- வீடியோக்கள் (4)
வியாழன், 18 ஏப்ரல், 2024
இப்படி பிரார்த்தனை செய்து பாருங்கள்
எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்னு சொல்வதைப்போல, நம் வாழும் வீட்டிற்கும், பூஜை அறைதான் பிரதானம் . நம் வழிபடக்கூடிய தெய்வசக்திகள் வசிக்கும் இடமாக பூஜை அறை இருக்கிறது.சிரசின் முக்கிய உறுப்பாக கண்களை நாம் சொல்வோம்.அதைப்போல , பூஜைஆறையின் கண்களாய் நாம் ஏற்றக்கூடிய விளக்கு இருக்க வேண்டும். ஒளி பொருந்திய கண்கள் வசீகரமான தோற்றத்தை கொடுக்கும். அதைப்போல , நாம் ஏற்றக்கூடிய விளக்கும் வீட்டிற்கும், தெய்வ சக்திகளுக்கும், வசீகரத்தை கொடுக்கும். “ஊருக்கு முன் விளக்கு ஏற்றினால் உயர் குடியாகும் “ என்பது பழமொழி . அத்தகைய சிறப்புமிக்க விளக்கை தினமும் ஏற்றி மனதார பிரார்த்திக்கும் போது, நம் கவலைகளுக்கு தீர்வு நமக்கு இறைசக்தி தெளிவு படுத்தும் என்பதே உண்மை. பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றி வந்தால் பெரும் புண்ணியம் கிட்டும். முன்வினைப்பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.விளக்கு ஏற்றும் போது , நம் மனம் ஒரு நிலைப்பட வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் , விளக்கு ஏற்றும் நேரத்தில் ஸ்லோகங்களை ஜபிக்க சொன்னார்கள் .. நமக்கு பிடித்த எந்த தெய்வத்தின் மந்திரங்களை சொல்லி விளக்கு ஏற்றும் பொழுது, அந்த தெய்வத்தின் முழு அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும்.. மனதார நம்பிக்கை வைத்து இப்படி தினமும் முயற்சித்து பாருங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....