இந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......
லேபிள்கள்
- கோலங்கள் (350)
- சமையல் (106)
- கவிதைகள் (102)
- மெஹந்தி (62)
- side dish (38)
- கைவினைகள் (38)
- my clicks (24)
- ஓவியங்கள் (22)
- ஸ்நாக்ஸ் (15)
- டிபன் (13)
- wall painting (12)
- பொம்மை வேலைப்பாடு (7)
- சிந்தனை துளிகள் (4)
- வீடியோக்கள் (4)
சனி, 13 ஏப்ரல், 2024
பூஜை பாத்திரங்கள் பளிச்சிட
பண்டிகை தினம் வந்தாலே, விளக்கு போன்ற பித்தளை பூஜை பாத்திரங்களை கழுவி பளபளப்பாக்கறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடும். ஆனா , நீ அப்படியில்ல.. ரொம்ப , ரொம்ப ஈசியா , பூஜை பாத்திரங்கள பளிச்சுன்னு ஆக்கலாம்.. இதுக்கு தேவை வெறும், இரண்டே பொருட்கள் தான்..முதல்ல, பூஜை பொருட்கள திசு பேப்பர் வச்சு, அதில இருக்க குங்குமம், எண்ணெய் இதுலாம் துடைச்சு எடுத்துக்கோங்க.. அப்புறம் நாம குடிக்க பயன்படுத்துற, உப்புத்தன்மையில்லாத சுத்தமான தண்ணீர பாத்திரங்கள் மூழ்கும் அளவு எடுத்துக்கோங்க. அதிகமா தண்ணீர் வேண்டாம். பாத்திரங்கள் மூழ்குற அளவு இருந்தாலே போதும். இப்போ அதில சேர்க்க , லெமன் சால்ட் எடுத்துக்கோங்க இது கடைகள்ல சுலபமா கிடைக்கும் பார்க்க சர்க்கரை போலவே இருக்கும். அந்த லெமன் சால்ட்டை 2 ஸ்பூன் சேர்த்து, எல்லா பாத்திரங்களையும் ஊறவைச்சிருங்க.. 20 நிமிடம் ஊறினாலே போதும். இப்போ இன்னொரு பாத்திரத்தில நல்ல தண்ணீர் வைச்சு, ஊற வைத்த பாத்திரத்தை , சபீனா வைச்சு,பூஜை பாத்திரங்கள மட்டுமே தேய்க்க வெச்சு இருக்க ,நார் வைச்சு சும்மா தேய்த்தாலே போதும்..பின் ஒரு துணி வைச்சு ஈரமில்லாம துடைச்சுட்டா, பூஜை பாத்திரங்கள் எல்லாமே பளிச்.. பளிச்.. இதோ பாத்திரங்கள் எவ்வளவு பளபளப்பா இருக்கு பாருங்க..இப்போ விளக்குகளுக்கு குங்குமமிட்டாச்சு..இப்போ பார்க்க அம்பிகைய அலங்கரிச்சு, குங்குமமிட்ட போல இருக்குல்ல.. நீங்களும் முயற்சிபண்ணி பாருங்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....