இட்லி ,தோசை போர் அடித்துவிட்டால் அவ்வப்போது ஊத்தப்பமும் செய்யலாம் . ஒரே வகை சமையலில் இருந்து சிறு மாறுதல் கிடைக்கும் .சுவையும் அருமையாக இருக்கும்
தேவையான பொருட்கள் :
தோசை மாவு - தேவைக்கு
பொடியாக நறுக்கிய - வெங்காயம் ,குடைமிளகாய்
கேரட்,பனீர் - துருவியது (சிறிது )
இட்லி மிளகாய் பொடி - சிறிது .
செய்முறை :
- வெங்காயம் ,காய்களை எல்லாம் கலந்து தனியே வைக்கவும் .
- வழக்கமாக தோசை வார்ப்பதை விட மிக சிறிது கெட்டியாக ஊற்றிக்கொள்ளவும் .
- அதில் லேசாக துளைகள் வர ஆரம்பித்த உடனே ,கலந்து வைத்த கலவையை மேலே தூவவும் .
- அதனுடன் பனீரும் ,இட்லி மிளகாய் பொடியும் தூவி விடவும் .
- சுற்றிலும் எண்ணெய் விட்டு ,திருப்பி போட்டு எடுக்கவும் .
- சுவையான ஊத்தப்பம் தயார் .
- இதில் தக்காளி ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,மல்லிதழை இவற்றையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம் .சுவையாக இருக்கும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....