ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

சோயா வடை /soya vadai

இந்த சோயா வடை ஆசியா அக்காவின் வலைப்பதிவில் பார்த்து முயற்சித்தது . மிக சுலபமான ,சுவையான வடையாக இருந்தது .

தேவையான பொருட்கள் :

சோயா (மீல் மேக்கர் )-20 
ஊறவைத்த கடலை பருப்பு -100 g
 மிளகாய் - 2 
இஞ்சி - சிறிய துண்டு 
பூண்டு - 3 
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் 
சோம்பு - 1/2 ஸ்பூன் 
பொடியாக நறுக்கிய  சின்ன வெங்காயம் - 6 
கருவேப்பிலை - பொடியாக நறுக்கியது 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

  • கடலைபருப்பை  2 மணி ஊறவைக்கவும் . சோயாவை கொதிக்கும் நீரில் போட்டு ,வேகவிட்டு எடுத்து வைக்கவும் .
  • பின் சோயாவை பிழிந்து , வைக்கவும் 
  • 3 ஸ்பூன் கடலைபருப்பை தனியே எடுத்து வைக்கவும் ,மீதி கடலைபருப்பை கொரகொரப்பாக அரைத்து , தனியே வைக்கவும் 
  • பின் சோயாவுடன் ,இஞ்சி ,பூண்டு ,மிளகாய் ,சோம்பு ,சேர்த்து அரைக்கவும் 
  • அதனுடன் ,தனியாக எடுத்து வைத்த கடலை பருப்பு , அரைத்த சோயாவையும் சேர்க்கவும் .
  • இந்த கலவையில் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,உப்பு ,மஞ்சள் தூள் , கருவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து  ,சிறு சிறு உருண்டைகளாக்கி வைக்கவும் 
  • எண்ணையை காய விட்டு , இந்த உருண்டைகளை வடையாக தட்டி , பொரித்து எடுக்கவும் .
  • அவ்வளவுதான் சுவையான சோயா வடை தயார் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...