முதல் முறையாக இந்த மட்டன் மிளகு ப்ரை செய்து பார்த்தேன் . மிகவும் சுவையாக இருந்தது .நிச்சயம் உங்களுக்கும் இது பிடிக்கும் . செய்து பாருங்க ..
- இந்த வறுவல் செய்ய தனியாக மட்டன் வேகவைக்க தேவையில்லை .மட்டன் குழம்பு செய்யும் போது ,வேகவைத்த மட்டன் கொஞ்சம் எடுத்தும் கூட இதை செய்யலாம்
தேவையான பொருட்கள் :
வேகவைக்க :
மட்டன் - 1 கப்
உப்பு - தேவைக்கு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2
வதக்க :
சோம்பு - 1/2 ஸ்பூன்
குடைமிளகாய் - கால் கப் (பொடியாக நறுக்கியது )
பெரிய வெங்காயம் - 1 (மெலிதாக நறுக்கியது )
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
கருவேப்பிலை - 2 கொத்து
மிளகு - உங்கள் காரத்துக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு
மிளகாய் சாஸ் - சிறிது
செய்முறை :
- முதலில் வேகவைக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து மட்டனை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .
- பிறகு ஒரு கடாயில் ,எண்ணெய் விட்டு , சோம்பு ,பச்சை மிளகாய் , சேர்த்து , பிறகு வெங்காயம் , கருவேப்பிலை ,குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் .
- வதங்கும் போது மிளகுத்தூள் ,உப்பு , சேர்த்து கிளறவும் .
- இதனுடன் வேகவைத்த மட்டன் துண்டுகளை (தண்ணீர் வேண்டாம் ) சேர்த்து நன்கு வதக்கவும் .
- இறுதியாக மிளகாய் சாஸ் சேர்த்து ,கிளறி இறக்கவும் .
- வாசனை கமகமக்கும் சுவையான மிளகு மட்டன் ப்ரை தயார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....