வியாழன், 13 மார்ச், 2025

ஏக்கம் கவிதை

 


ஏக்கங்களுக்கு 

எப்போதும் 

என் மீதான 

பிரியங்கள்  

அதிகம்… 

விருப்பப்பட்டியலில் நிறைந்து கிடக்கும், கனவுகளை ,

ஒரு வெற்றுப்பார்வை மட்டும் வீசி ,

மனத்திரையில் மட்டும் கண்டு,  ஏக்கங்களோடு கடந்துபோகும் 

மன நிலையை மறைக்க இரும்புத்திரை கொண்டு  தினம்தினம்  நடத்தும் போராட்டங்களை  என்னவென்று சொல்ல…

கனவுகள் கரங்களில் கிடைக்கும் காலம் வரை காத்திருக்கும் இந்த கனவுக்கண்கள்…



திங்கள், 10 மார்ச், 2025

தனிமையும் நானும்..



இந்த விரல்களுக்கிடையே ஒரு 

கவிதை ஒன்று கசங்கிக்கிடக்கிறது.. 


அதை வெளிப்படுத்த தினமும் திணறிக்கொண்டிருக்கிறது…


அது தன் எண்ணங்களை 

எல்லாம் கோலங்களாய் 

வடித்துக்கொண்டிருக்கிறது…


அவ்வப்போது , மேகவெளியில் 

மிதந்து நட்சத்திரங்களோடு 

கதைபேசிக்கொண்டிருக்கும்… 


தன்னைத்தானே தனிமை வயப்படுத்தி, ஆற்றாமையில் அவ்வப்போது அழுது கொண்டிருக்கும்…

தனக்கான தேடலை தொடர்ந்தபடியே… 

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Enjoy this page? Like us on Facebook!)