Nonveg லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Nonveg லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

non veg feast menu

  அசைவ விருந்துக்கான மெனு இது ..இந்த ரெசிபி எல்லாமே ஏற்கனவே எனது வலைப்பக்கத்தில் சேர்த்துள்ளதால் ஒவ்வொரு ரெசிபிக்கான லிங்க் கீழே  இணைத்துள்ளேன் ...

 i

அசைவ மெனு :

நண்டு கிரேவி

இறால் கிரேவி

மீன் குழம்பு

மட்டன் குழம்பு

முட்டை மசாலா

மீன் வறுவல் 

இறால் 65

falooda



திங்கள், 19 ஜூன், 2017

ஈரல் வறுவல் /goat liver fry

பொதுவாக மட்டன் ஈரல் வைட்டமின் A நிறைந்தது . குறிப்பாக குழந்தைகள் ,கர்ப்பிணிகளுக்கு மிகவும் உகந்தது . மட்டன் ஈரல் மட்டும் தனியாக வறுவல் செய்தால் சிறந்த சுவையுடன் இருக்கும் ...

திங்கள், 30 ஜனவரி, 2017

prawn 65/இறால் 65

இறால்65 மிகவும் அருமையா இருக்கும் .முக்கியமா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் 



சனி, 15 அக்டோபர், 2016

தந்தூரி சிக்கன் /tandoori chicken/no oven recipe

தந்தூரி சாப்பிட ஹோட்டல்  போக வேண்டிய அவசியம் இல்லை ..மிகவும் சுலபமான முறையில் சுவையா தயாரிக்கலாம் வாங்க ..


தேவையான பொருட்கள் :

சிக்கன் துண்டுகள் - 8 -10 (leg piece also)

தயிர் - 1கப் 

வெண்ணெய் - 1 ஸ்பூன் 

மஞ்சள்தூள் - 1 ஸ்பூன் 

சிவப்பு கலர் பவுடர் - சிறிது 

மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 

உப்பு - தேவைக்கு

எண்ணெய்- தேவைக்கு

அடுப்பு கரி - 2 அல்லது 3  துண்டுகள் 

அலங்கரிக்க :

வெங்காயம் - நறுக்கியது 

மல்லி தழை - சிறிது 

எலுமிச்சை  -  2 துண்டுகள் 

செய்முறை :

  • சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து ஆழமாக   கீறி வைக்கவும் .
  • அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது ,சிவப்பு கலர் பவுடர் ,உப்பு ,மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டி ஊறவிடவும் 
  • இதை அப்படியே 1 மணி நேரம் வைக்கவும் .
  • ஒரு நான்ஸ்டிக் பான் வைத்து அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும் .
  • அதில் சிக்கன் துண்டுகளை இட்டு,இருபுறமும் திருப்பி  10 - 12 நிமிடங்கள் நன்கு  அடர் பொன் நிறமாகும் வரை வைக்கவும் .
  • அங்காங்கே கருப்பாக வரும்வரை வைக்கவும் 
  • அடுப்புக்கரி துண்டுகளை காஸ் அடுப்பின் flame ல் வைத்து ,நன்கு சிவப்பாகும் வரை நெருப்பிலே வைக்கவும் 
  • ஒரு பாத்திரத்தில் சமைத்த சிக்கன் துண்டுகளை வைத்து , ஒரு சிறு கிண்ணத்தில் நெருப்பில் வைத்த அடுப்புக்கரியை வைத்து ,அந்த கிண்ணத்தில் உள்ள கரியில் சில துளிகள் எண்ணெய் விடவும் .
  • அதிலிருந்து இப்போது புகை வெளிவரும் உடனே அந்த பாத்திரத்தை மூடி விடவும் 
  • அந்த புகை சிக்கன் துண்டுகளுடன் பாத்திரம் முழுதும் இருக்கும் .
  • 1 நிமிடம் இப்படியே விட்டு பாத்திரத்தை  திறந்து சிக்கன் துண்டுகளை வெளியே எடுக்கவும் .
  • இதனுடன் வெங்காயம் ,எலுமிச்சை ,மல்லித்தழை வைத்து பரிமாறவும் 
  • நிச்சயம் சுவையாக இருக்கும் 




வியாழன், 5 மே, 2016

சிக்கன் பிரியாணி 2/chicken briyani 2

எப்போதும் ஒரே மாதிரி பிரியாணி செய்யாமல் நான் சில மாற்றங்கள் செய்து அவ்வப்போது சமைப்பது வழக்கம் ... அதுபோல முயற்சித்தது இந்த பிரியாணி ...சொல்லப்போனால் இதை செய்த பிறகு அதிக முறை செய்து விட்டேன் ...என் கணவரின் favourite ஆகி விட்டது ..
இந்த பிரியாணிக்கு மணம் சிறப்பாக இருக்கும் .அதற்க்கு காரணம் இதில் அரைத்து சேர்க்கும் முறை தான்  ..

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
சிக்கன் - 1மற்றும் 1/4 கப்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
பிரிஞ்சி இலை -1
பட்டை -1 சிறிது
கிராம்பு - 1
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
மல்லி ,புதினா - சிறிது

அரைக்க :
சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் (உங்கள் காரத்துக்கு ஏற்ப )
தக்காளி - 1
பட்டை - 1
ஏலக்காய் - 1
கிராம்பு -2
மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு -1 ஸ்பூன்
புதினா ,மல்லி - சிறிது

செய்முறை :

  • முதலில் தக்காளி வெங்காயம் நறுக்கி வைக்கவும் .
  • பாஸ்மதியை சிறிது ஊற வைக்கவும் .
  • அரைக்கவேண்டியவற்றை அரைத்துக்கொளவும் .
  • பின் குக்கரில் எண்ணெய் ,நெய் விட்டு ,பட்டை ,பிரிஞ்சி இலை ,கிராம்பு ,சேர்த்து ,பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சேர்த்து வதக்கவும்
  • .அதனுடன் சிக்கன் துண்டுகள் ,அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும் ..
  • பின் உப்பு சேர்த்து ,2 கப் தண்ணீர் சேர்த்து ,கொதிக்க விடவும் .
  • உப்பு ,காரம் சரிபார்த்து ,அரிசி சேர்த்து ,1 கொதி விட்டு ,மல்லி ,புதினா தூவி மூடி சிம்மில் 10 நிமிடங்கள் வைக்கவும் .
  • 10 நிமிடங்கள் கழித்து ,அடுப்பை அணைக்கவும் .
  • முக்கிய குறிப்பு : 
  • அடுப்பை அணைத்த பின் உடனே திறக்க கூடாது .1-2 மணி நேரம் அப்படியே விடுவது சிறந்தது .
  • குக்கரை திறக்கும் போது அதன் மணம் கமகமக்கும் ...
  • சுவையான சிக்கன் பிரியாணி தயார் 
  • இதே முறையில் ,அரிசியை பாதி வேகவிட்டு வடித்து , வதக்கிய பொருட்கள் ,மசாலா சேர்த்து ,மூடி தம் போட்டும் செய்யலாம் ..
  • இந்த முறையும் சுவையாக இருக்கும் ..
  • இதனுடன் தாள்ச்சா , வெங்காய ரெய்தா ,வேகவைத்த முட்டை இவற்றோடு பரிமாறினால்,இன்னும் சுவை கூடும் ..





திங்கள், 30 நவம்பர், 2015

Kaadai gravy/காடை கிரேவி

காடை சிக்கனை விட எளிதில் வேகும் .ஆனால் சுவை அபாரமாக இருக்கும் 
தேவையான பொருட்கள்:
காடை -2
பெரிய வெங்காயம் -1
தக்காளி -1
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
மிளகுத்தூள்-1ஸ்பூன் 
மல்லித்தூள்-1ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/2ஸ்பூன்
கரம் மசாலா -1/2 ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
கருவேப்பிலை - 1 கொத்து 
அரைக்க 1:
சின்ன வெங்காயம் -10 
பச்சை மிளகாய் -1
மல்லி தழை-சிறிது 
அரைக்க2:
தேங்காய் -3துண்டுகள்
சோம்பு-1/2ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்-தாளிக்க
பட்டை ,கிராம்பு,பிரிஞ்சி இலை-தலா1
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் 

செய்முறை:
  • அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து தனியே எடுத்து வைக்கவும் .
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு , தாளிக்க கொடுத்த வற்றை சேர்த்து தாளிக்கவும் .
  • பின் இதனுடன் வெங்காயம் ,சேர்த்து பொன்னிறமானதும் ,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .
  • பின் இதனுடன் தூள் வகைகள்,காடை துண்டுகள் ,உப்பு சேர்த்து வதக்கவும் .
  • தேவையான அளவு நீர் விட்டு,மூடி  வேக விடவும் .
  • குக்கர் என்றால் ஒரு விசில் போதுமானது . பாத்திரம் என்றால் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சரி பார்க்கவும் .
  • வெந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும் .
  • சூடான சாதம் ,சப்பாத்திக்கு மிகவும் சுவையானது .




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...