இந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......
லேபிள்கள்
- கோலங்கள் (409)
- கவிதைகள் (107)
- சமையல் (106)
- மெஹந்தி (62)
- side dish (38)
- கைவினைகள் (38)
- my clicks (24)
- ஓவியங்கள் (22)
- ஸ்நாக்ஸ் (15)
- wall painting (13)
- டிபன் (13)
- பொம்மை வேலைப்பாடு (7)
- சிந்தனை துளிகள் (4)
- வீடியோக்கள் (4)
வெள்ளி, 28 மார்ச், 2025
வியாழன், 13 மார்ச், 2025
ஏக்கம் கவிதை
ஏக்கங்களுக்கு
எப்போதும்
என் மீதான
பிரியங்கள்
அதிகம்…
விருப்பப்பட்டியலில் நிறைந்து கிடக்கும், கனவுகளை ,
ஒரு வெற்றுப்பார்வை மட்டும் வீசி ,
மனத்திரையில் மட்டும் கண்டு, ஏக்கங்களோடு கடந்துபோகும்
மன நிலையை மறைக்க இரும்புத்திரை கொண்டு தினம்தினம் நடத்தும் போராட்டங்களை என்னவென்று சொல்ல…
கனவுகள் கரங்களில் கிடைக்கும் காலம் வரை காத்திருக்கும் இந்த கனவுக்கண்கள்…
புதன், 12 மார்ச், 2025
திங்கள், 10 மார்ச், 2025
தனிமையும் நானும்..
இந்த விரல்களுக்கிடையே ஒரு
கவிதை ஒன்று கசங்கிக்கிடக்கிறது..
அதை வெளிப்படுத்த தினமும் திணறிக்கொண்டிருக்கிறது…
அது தன் எண்ணங்களை
எல்லாம் கோலங்களாய்
வடித்துக்கொண்டிருக்கிறது…
அவ்வப்போது , மேகவெளியில்
மிதந்து நட்சத்திரங்களோடு
கதைபேசிக்கொண்டிருக்கும்…
தன்னைத்தானே தனிமை வயப்படுத்தி, ஆற்றாமையில் அவ்வப்போது அழுது கொண்டிருக்கும்…
தனக்கான தேடலை தொடர்ந்தபடியே…
ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017
அடுப்பங்கறை பிரம்மாக்கள்

அடுக்களைக்குள்
அழிந்துபோன
பிரம்மாக்களை
நீங்கள் என்றாவது அறிந்ததுண்டா?
இன்னும் எத்தனையோ
சாதனைகள் படைக்கும்
பிரம்மாக்களை
இழந்து விட்டோமென
நீங்கள் வருந்தியதுண்டா?
கயல்விழியும் ,மெல்லிடையும்,கார்கூந்தலும்
அடையாளமென வகைப்படுத்தி விட்டீர்!
மறைக்கப்பட்ட எங்களின் அடையாளங்கள் இன்னும் எத்தனையோ?
உண்மையை உரக்கச் சொன்னால்,இங்கே
செவிசாய்க்க சிலர் இருப்பர் இதோ உங்களைப்போல !
கண்டுவைத்த
கனவுகளை எண்ணி ,
கசிந்துருகும்,
கன்னிகளைப்பற்றி
என்றாவது வியந்ததுண்டா?
ஆதங்கம் உங்களுக்கும்
இருக்குமென்றால்,
ஆதரியுங்கள்!
சில அடுப்பங்கரை
பிரம்மாக்களை......
-சங்கீதா செந்தில்
வியாழன், 26 ஜனவரி, 2017
உன்னையே எண்ணி இன்னமும் நான் ...
உன் பாதங்கள் தேடி ,
உன்னையே எண்ணி
இன்னமும் நான்...
உன் ஒற்றைச்சொல் கேட்க
ஓடிவரும் மழலைபோல,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ....
ஆதிமுதல் அந்தம் வரை
எல்லமாகிப்போன,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...
போகும் இடங்கள் எங்கும்
தொடரும் உன் நினைவுகள் ஏந்தி ,
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...
என் இறுதி மூச்சின்
உஷ்ணமது தீரும்வரை
உன்னையே எண்ணி
இன்னமும் நான் ...




